சனி, 3 ஆகஸ்ட், 2013

இடைவேணில் - அரங்கன் தமிழ்


தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு ஜன்சதாப்தி ரயிலில் அதிவிரைந்து கொண்டிருந்தேன்..

சித்ரா.. வெகுநாட்களுக்குப் பிறகு நேற்று கண்பட்டாள்..  வண்டி திருச்சியில் நிற்கும் போது நான் அமர்ந்திருந்த பெட்டியில் ஏறினாள்..
நான் வாசலுக்கு அருகாமை இருக்கையிலிருந்தேன். வழக்கமான புன்னகையுடன் என்னை அருகினாள்

எப்படி இருக்கே,..?”

நல்லா இருக்கேன் சார்நீ எப்படி இருக்கே..?

இம்மாதிரியான வாக்கிய அமைப்புகள் எனக்கு எப்போதும் சுவாரஸ்யம் அளிப்பவைமுதல்வார்த்தை துவங்கும் போது உச்ச மரியாதையாக சார் என்றும்.. அடுத்தடுத்த வார்த்தைகளில் நீ வா போ என ஒருமையில் நெருங்கியபடியுமான இந்த வாக்கியங்கள்.. சென்னை மாதிரியான ஏரியாக்களில் அதிகம் புழங்கப்படுபவை….

சித்ரா இன்ன பிற திருநங்கைகள் போல இல்லை.. கரகரத்த குரல் இல்லை.. ஒழுங்கமையாத புடவை உடுத்தல் இல்லை.. எப்போதும் சுடிதார்.. ஏனையவர்களைப் போல் ட்ரேட் மார்க் கைதட்டி மாமா.. அக்கா காசு குடு..என்று கேட்கிற வழக்கம் இல்லை

அரவாணி.. அண்ணாஅரவாணிஅக்கா.. காசு குடுங்க..மெல்லிய குரல்.. தொன்னாறு சதவீதம் பெண்மை நிறைந்த குரல்..

நீ மொதல்ல குடு சார்.. இன்னைக்கு உன் கைராசி எப்படி இருக்குன்னு பார்க்கறேன்..

நான் கொடுத்தேன்.. நெற்றிமேல் வைத்து ஒற்றிக்கொண்டாள்..

இன்றைக்கு கூடுதல் சேகரிப்புக்கான வேண்டுதலாயிருக்கும்..

சித்ரா எப்படியும் மாதத்தில் நாலைந்து முறையாவது திருச்சியிலிருந்து கிளை பிரியும் ரயில் பயணங்களில் தென்படுவாள்…. ரயிலில் எல்லோரிடமும் உறுத்தலில்லாமல் யாசிப்பவள்..

ஒரு முறை அவள் பெயர் கேட்டு தெரிந்து கொண்ட பிறகு எங்கு பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்வாள்.. ஒரு மெலிதான புன்னகையோடு கடந்து போவாள்..…!

இன்று அவளுடன் எதாவது பேசலாம் என்றுதான் தோன்றியது..

காபி சாப்பிடறியா..?”

இல்ல.. வேணாம் சார்.. எல்லா பெட்டியிலயும் போய் ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வந்தடறேன்..

சொல்லிவிட்டு அடுத்தடுத்த பெட்டிகளில் மறைந்து போனாள்..

வண்டி கரூர் தாண்டிய பின் நான் இருந்த பெட்டிக்கு திரும்பினாள்..
நெற்றியில் வேர்த்துகளைத்திருந்தாள்..

சார்.. ஒரு டீ வாங்கி குடு சார்..

சரி.. உட்காரு..என் அருகில் காலியாயிருந்த இருக்கையை
காட்டினேன்.. எந்த தயக்கமுமின்றி அமர்ந்தாள்..!

சக பயணிகளின் அதிர்ச்சி.. ஆச்சரிய.. விருப்பமற்ற பார்வைகள் எங்களை மொய்க்கத் தொடங்கியிருந்தன.. இருவருமே அதை அலட்சியித்தோம்

எனக்கும் சேர்த்து டீ சொன்னேன்.. சாப்பிட்டோம்.. நானே துவங்கினேன்..

உனக்கு என்ன வயசு சித்ரா..?”

இருபத்தி எட்டு சார்.. ஏன் கேட்குற..?”

சும்மாதான்.. எவ்வளவு நாளா ரயில்ல காசு வாங்குற.?”

நான் ரொம்ப வருஷமாவே இப்படித்தான்..

திருநங்கைகளிடம் எல்லா சமான்யனும் கேட்கும் அந்த கேள்வியை நானும் கேட்டேன்..

வேற எதாவது கவுரவமான வேலைக்கு போகலாம்ல.. எதுக்கு எல்லார்கிட்டயும் காசு வாங்கனும்..?”

அவளும் எல்லா சாமான்யனிடமும் சொல்லியிருக்கக் கூடிய பதிலை எனக்கும் சொன்னாள்.

எனக்கென்ன ஆசையா சார்.. நானும் நிறையா இடத்துல வேலைக்கு கேட்டுப் பார்த்துட்டேன்.. யாரு தர்றா..? ஒருத்தர் மட்டும் ஜெராக்ஸ் கடையில வேலை குடுத்தார்.. நாலு நாள் தான் வேலை செஞ்சேன்.. அதுக்குள்ள அந்த ஓனரோட பொண்டாட்டி வந்து என்னைய விரட்டிவிட்ருச்சு…!”

அவள் சொன்னதில் நிஜமான ஆதங்கம் இருந்த்து.. நான் பேச்சை மாற்றினேன்..

ஏன் இப்போ உன்னை எல்லாம் அடிக்கடி பார்க்க முடியறதில்லை..?”

வைகை, பல்லவன்ல தான் சார் அடிக்கடி வருவேன்..போன மாசம் ஒரு பிரச்சனை ஆயிடுச்சு.. அதான்.. இந்த ட்ரெயினுக்கு மாறிட்டேன்..

ஏன்.. என்ன பிரச்சனை..?”

ஒருத்தன்ட்ட காசு கேட்டேன்.. பாத்ரூம்க்குள்ள வா.. தர்ரேன்னு சொன்னான்.. நான் கண்டபடி திட்டிவுட்டேன்..

அப்புறம்..?”

அப்புறம் அவன் என்னைய கன்னத்துலயே அடிச்சிட்டான்.. நானும் திருப்பி அடிக்க போயிட்டேன்.. அப்புறம் ஒரு போலீசு அக்கா வந்துதான் என்னைய கூட்டிட்டி போச்சு..

ம்..

அதுக்கப்புறம் நான் அந்த ரயில்ல போறதே இல்லைசுசிலா அக்காதான் போகுது…”

யாரு சுசிலா அக்கா..?“

அவங்களும் அரவாணிதான்.. நான் ஊர்லருந்து ஒடியாந்தப்ப அவங்கதான் என்னைய அவங்களோட சேர்த்துகிட்டாங்க.. ரொம்ப நல்ல அக்கா..

வண்டி ஈரேட்டை நெருங்கிக் கொண்டிருந்த்து…. நான் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை பிரித்து அவளுக்கு நீட்டினேன்.. மூன்று எடுத்துக்கொண்டாள்

வெளியில் உலகம் இரவுப் போர்வை எடுத்து முழுவதுமாய் போர்த்திக்கொண்டிருந்த்து.... நான் தொடர்ந்தேன்..

உன் சொந்த ஊரு எது..? அம்மா அப்பால்லாம் இருக்காங்களா..?”

இந்த கேள்வியை ஒட்டி அவளது முகத்தின் நிகழ்ந்த மெல்லிய மாற்றத்தை கவனித்தேன்.. அவளைப் பொருத்த மட்டிலும் அது ஒரு அவசியமற்ற கேள்வியாக இருந்திருக்கலாம்.. அதன் பிறகான அவளது பதிலில் ஒரு பரிதாப குழந்தைத்தனம் பற்றிக் கொண்டிருந்த்து..

சொந்த ஊரு முசிறி பக்கத்துல தொட்டியம் சார்அப்பா நான் நாலு வயசா இருக்கும் போதே செத்துட்டாருஅம்மாவும் ஒரு அண்ணனும்தான்…”

அப்புறம் ஏன் நீ இங்க..?”

என்னோட சின்ன வயசுல ரெண்டு பேரும் பாசமாத்தான் இருந்தாங்கஎனக்கும் அண்ணன் மேல ரொம்ப இஷ்டம்.. அண்ணனுக்கு என்னை விட பத்து வயசு அதிகம்என்னோட பதினேழாவது வயசுலதான் நான் அரவாணின்னு வீட்டுக்கு தெரிஞ்சுதுஅதுக்கப்புறம் அண்ணனுக்கு என்னை பிடிக்கலஎங்கயாவது ஓடிப்போயிடுன்னு அடிக்கடி அடிப்பான்.. எனக்கு வாழவே இஷ்டம் இல்ல..

உங்க அம்மா ஒன்னும் சொல்லலயா..?”

அவங்களுக்கு எம்மேல பாசம்தான்.. ஆனா அண்ணனை எதிர்த்துகிட்டு அவங்களால ஒன்னும் பண்ண முடியல.. அவன் அப்பவே தண்ணியெல்லாம் அடிக்க ஆரம்பிச்சிட்டான்.. அவன் போதையில இருக்கும் போது கண்ணுலயே மாட்ட மாட்டேன்.. பெல்டாலயே அடிச்சிடுவான்…”

ம்.. வேற யாரும் உனக்கு சப்போர்ட் பண்ணலயா..?”

எனக்கு யாரும் ப்ரண்ட்ஸ்ம் கிடையாது.. தெருவுல நடந்து போனாலே எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க.. அதானால அண்ணன் வீட்டை விட்டு வெளிய வரக்கூடாதுன்னு சொல்லிட்டான்….”

அப்புறம் எப்படி நீ இங்கே..?”

ஒரு நாளு அண்ணன் தண்ணி போட்டுட்டு வந்து ரொம்ப அடிச்சிட்டான்.. என்னால ரெண்டு நாளு கையே துாக்க முடியல…. அடுத்தவாரம் நான் வீட்ல இருந்த நுாத்தி அம்பது ரூபா பணத்தை எடுத்துட்டு திருச்சிக்கு வந்துட்டேன்..

ம்..

அப்போ எனக்கு பதினெட்டு வயசு.. சுசிலா அக்காதான் அவங்க கூட என்னைய சேர்த்து பார்த்துகிட்டாங்க.. அவங்களும் என்னை மாதிரியே அடிபட்டு வந்தவங்கதான்அப்படியே ஓடிப்போச்சு சார்.. பத்து வருஷம்….”

இதை அவள் சொல்லும் போது தன் நம்பிக்கைகளை தானே சிதைத்துக் கொண்டவளைப் போல்தான் தோன்றியது..! வேறு பக்கம் திரும்பி துப்பட்டாவால் கண்களை துடைத்துக் கொண்டாள்..

உங்க அம்மா..?”

அது நான் ஓடிவந்த கொஞ்ச நாள்லயே செத்துப்போச்சாம் சார்.. நான் போகலை.. அப்போ கையில காசும் இல்லை…”

அதுக்கப்புறம் உங்க ஊருக்கு போகவே இல்லையா..?”

போன வருஷம் போனேன் சார்.. எங்க அண்ணனுக்கு உடம்புக்கு முடியாம கிடக்கறான்னு கேள்விப்பட்டேன்அதான் பார்க்கலாம்னு போனேன்..

என்னவாம் உங்க அண்ணனுக்கு..?”

நிறைய தண்ணி அடிச்சி ரெண்டு கிட்னியும் பழுதாயிடுச்சாம்.. கிட்னி மாத்தலன்னா செத்துடுவான்னு டாக்டர் சொல்லி அனுப்பிட்டாங்களாம்.. அவன் பொண்டாட்டியும் ரெண்டு குழந்தைகளும் னு அழுவுதுங்க…”

அப்புறம்..?”

அப்புறம் என்னஎனக்கு மனசு கேட்கல…. நான் கையில வச்சிருந்த இருபத்திநாலாயிரம் பணத்தை குடுத்து ஆப்பரேஷன் பண்ணச் சொன்னேன்..

கிட்னிக்கு என்ன பண்ணீங்க..?“

ஒரு பழுத்த இலை உதிர்வதைப் போல சித்ரா அந்த கடைசி வாக்கியத்தை உதிர்த்தாள்..!


என்னோட கிட்னியே ஒன்னு குடுத்துட்டேன்…..”

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

ஜப்பானிய நாடோடிக் கதை


மந்திரமும் தந்திரமும் – ஜப்பானிய நாடோடிக்கதை

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

மந்திரமும் தந்திரமும்

ஒரு காலத்தில், ஒரு பெரிய மலைக்கு அருகே, ஒரு அழகிய கல்விக்கூடம் இருந்தது. அதில் ஒரு இளைஞன் பயிலச் சேர்ந்தான்.  அவன் மிகவும் குறும்புக்காரன்.  எப்போதும் ஏதாவது சில்மிஷம் செய்து கொண்டே இருப்பான்.  அடுத்தவர்களுக்கு தொந்தரவுகளைக் கொடுத்து மகிழ்ச்சி கொள்வான்.

 கடினமான பயிற்சிகளைச் செய்ய விரும்ப மாட்டான். அடிக்கடி குட்டித் தூக்கம் போட விரும்புவான்.  எப்போதும் முயல்களை துரத்திப் பிடித்து இம்சை செய்வான்.  குருவிற்கு அவனை எப்படித் திருத்துவது என்று புரியவில்லை.  அவருக்கு அவன் பெருத்த தலைவலியாகிவிட்டிருந்தான்.

ஒரு இலையுதிர் காலத்தில், மரத்தின் இலைகளெல்லாம் நிறம் மாறிக் கொண்டிருந்த போது, அந்த இளைய மாணவன், மலைகளில் இருந்த மரங்களில் கஷ்கொட்டைகள் காய்த்து மணம் வீசுவதைக் கண்டான்.  அவனுக்கு பிடித்த கொட்டைகள்.  சென்று பறித்து வர விருப்பப்பட்டான்.
குருவிடம் அனுமதி கேட்கச் சென்றான்.

“குருவே.. அங்கே மலை மேலே நிறைய கஷ்கொட்டை மரங்கள் காய்த்து நிற்கின்றன.  எனக்கு கஷ்கொட்டைகளைத் திங்க மிகவும் பிடிக்கும்.  நான் சென்று அதைப் பறித்து உண்ணலாமா?” என்று கேட்டான்.

“மலைக்கு அருகே செல்வது கூடாது.  மக்கள் அந்த மலையில் ஒரு சூன்யக்கார மந்திரவாதி ஒருத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.  நீ அங்கே போனால் அவளுக்கு இரையாக வேண்டியது தான்..” என்று அறிவுறுத்தும் வகையில் சொன்னார் குரு.

அறிவுரைகளை கேட்கும் நிலையில் இல்லை மாணவன்.  “ஓ… அதெல்லாம் உண்மையாக இருக்காது.  யாராவது சும்மா கதை கட்டி விட்டிருப்பார்கள்.  தயவு செய்து நான் போய் வருகிறேன் குருவே..” என்று கெஞ்சினான்.

குருவிற்கு சொன்னால் புரியாதது பட்டால் தான் புரியும் என்று எண்ணி, சொல் பேச்சு கேட்காத மாணவனின் மனம் கோணாமல், சம்மதம் தெரிவிக்கும் வகையில் தலையை ஆட்டிவிட்டு, அவனது பாதுகாப்பை மனதிற்கொண்டு, “சரி.. ஒரு தரம் பட்டால் தான் உன்னைப் போன்ற குறும்புக்காரன் திருந்துவான்.  நீ போகலாம். ஆனால் நீ அங்கு சூன்யக்காரியைச் சந்திக்க நேர்ந்தால் இதைப் பயன்படுத்திக் கொள்..” என்று கூறி, அந்த மாணவனிடம் மூன்று அதிர்ஷ்ட மந்திரப் பத்திரங்களைத் தந்தார்.  அவை காகிதத்தால் ஆன நல்ல வாசகங்கள் கொண்ட பத்திரங்கள்.  மாணவன் அதை எடுத்துக் கொண்டு, உடனே மலையை நோக்கி வேகமாக விரைந்தான்.

மலையை அடைந்ததுமே, அவன் எண்ணியதைப் போன்று, அடர்ந்த கஷ்கொட்டை மரங்களில் பழங்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்திருப்பதைக் கண்டான்.  அவன் மிகவும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்துச் சேர்க்க ஆரம்பித்தான்.  அவன் நேரம் போவது தெரியாமல் பழங்களைப் பறிப்பதில் இருந்தான். மதியத்திற்கு மேல் தான் மலைக்கு வந்த காரணத்தால், விரைவிலேயே மேற்கே சூரியன் இறங்குவதைக் கூட அவன் உணரவில்லை.  அவன் உணர்விற்கு வந்து சுற்றிலும் பார்த்த போது, இருள் கவிழ்ந்து விட்டிருந்தது.  “இருட்டாக இருக்கும் போது சற்று பயங்கரமாகத் தான் இருக்கிறது.  ஆனால் பயப்படக் கூடாது” என்று தனக்குத் தானே தைரியம் கூறிக் கொண்டான். ஆனால் அதே நேரத்தில் “இப்போது சூன்யக்காரி வந்தால் என்ன செய்வது?” என்ற எண்ணமும் ஏற்பட்டது.

கல்விக்கூடத்திற்குத் திரும்ப எத்தனித்த போது,  அவனுக்குப் பின்னால் திடீரென்று சத்தம் வந்ததைக் கேட்டான். “ஓ.. சிறுவனே.. எப்படி இருக்கிறாய்?” என்றது அன்பான குரல் ஒன்று.  சூன்யக்காரியை எண்ணிக் கொண்டு இருந்த வேளையில், அக்குரலைக் கேட்டதும், சற்று பயந்து போனான்.  ஆனால், சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் திரும்பிப் பார்த்த போது, மிகவும் கருணை மிகுந்த முகத்துடன் ஒரு கிழவி நிற்பதைக் கண்டான்.  “நீ கஷ்கொட்டை பறிக்க வந்தாயா?  இருட்டி விட்டதே!  நீ வந்த வேலை முடிந்ததா?”

அவளது அன்பான வார்த்தைகளில் பயம் விட்டு “ஆமாம்” என்றான் அமைதியாக.  “நீ என் வீட்டிற்கு வருகிறாயா? நான் இந்த கஷ்கொட்டைகளை சுவையாக வேக வைத்துத் தருகிறேன்” என்றாள் மேலும்.

மாணவன் மிகவும் பசியுடன் இருந்ததாலும், கஷ்கொட்டை சீக்கிரமே உண்ண விரும்பியதாலும்,  உடனே அந்தக் கிழவியைத் தொடர்ந்து சென்றான்.  வீட்டை அடைந்ததும், கிழவி கஷ்கொட்டையைப் பதமாக வேக வைத்துக் கொடுத்தாள்.  மிகவும் மகிழ்ச்சியுடன் வயிறு முட்ட உண்டான் மாணவன்.  உண்டதும் களைப்பு மேலிட, தூங்கிப் போனான்.  திடீரென்று முழிப்பு வந்து எழுந்தான். எவ்வளவு நேரம் தூங்கியிருப்பான் என்று அவனுக்குத் தெரியவில்லை. விழத்த போது அந்த அறையில் கிழவி இல்லாததைக் கண்டு, அவளைத் தேடச் சென்றான்.  அறையை விட்டு வெளியே வந்ததுமே, அடுத்த அறையில் சற்றே வித்தியாசமான சத்தம் கேட்டது.  வியப்புடன் அந்த அறைக்குள் எட்டிப் பார்த்தான்.  அங்கே மிகவும் பயங்கரமான தோற்றத்துடன் யாரோ கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்ததைக் கண்டான்.

“ஆ..” என்று பயந்து அலறினான்.

சத்தம் கேட்டு அந்த உருவம் தலையைத் தூக்கி அந்த மாணவனைப் பார்த்தது.
“என்னைப் பார்த்து விட்டாயா?  வா சிறுவனே.. வா.. பயப்படாதே.. நான் தான் உன்னை அழைத்து வந்தேன்..”

“நீ… யார்… யார்?” என்று பயத்துடன் கேட்டான்.
“நான் தான் மலைச் சூனியக்காரி. நான் இப்போது உன்னை உண்ணப் போகிறேன்” என்றாள் நிதானமாக.

இதைச் சொல்லிக் கொண்டே எழுந்து வந்த சூன்யக்காரி, மாணவனை லாவகமாக பிடித்துக் கொண்டாள்.
கிழவியின் பிடியில் சிக்கிய மாணவன் தப்பிக்க யோசனை செய்ய, முதலில் சிறிது நேரம் கிடைக்க வழி செய்ய எண்ணினான்.  உடனே அவன் “ஓஹோ நீ தான் அந்த சூன்யக்காரியா.. சரி சரி.. எனக்கு இப்போது அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும். நான் இப்போது போகவில்லையென்றால், என் உடை ஈரமாகி விடும்.  இதனால் என்னை முதலில் கழிப்பிடம் செல்ல விடு..” என்றான் சற்றே தைரியமாக.

சூன்யக்காரி மிகவும் இருட்டிவிட்டதால், மாணவன் அங்கிருந்து எப்படியும் தப்ப முடியாது என்று தீர்மானமாக எண்ணியதால்,  அவன் போக்கில் விட்டுப் பிடிக்கலாம் என்று எண்ணி, “அப்படியா.. சரி சரி..  ஆனால் நான் உன்னைக் கயிற்றால் கட்டிய பின்னரே அனுப்புவேன். நீ என்னிடமிருந்து எப்படியும் தப்பிக்க முடியாது தெரியாமா?” என்று அவனைக் கயிற்றால் கட்டி, அதன் முனையைத் தன் கைகளில் சுற்றி கட்டிக் கொண்டாள்.

மாணவன் கழிவறைக்கு கட்டிய கயிற்றுடன் சென்றான். சூன்யக்காரி வாயிலில் காத்துக் கொண்டு நின்றாள்.

சில நொடிகளுக்கு பின், “என்ன.. முடிந்ததா?” என்று கேட்டாள் கிழவி.
“இதோ வந்து விட்டேன்..” என்று பதில் கூறிய மாணவன், வெகு நேரம் இது போல் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு, தப்பும் வழியை யோசிக்க ஆரம்பித்தான்.  கழிப்பறையில் ஒரு சிறிய ஜன்னல் இருந்தது.  அதன் வழி தப்பிவிடலாம்.  ஆனால் சூன்யக்காரியை தான் உள்ளே இருப்பதாக நம்ப வைக்க வேண்டும்.  “ஊம்.. என்ன செய்யலாம்?” என்று யோசித்தான்.  “ஆ.. சூன்யக்காரியிடம் மாட்டினால் தப்பிக்க வேண்டி, குரு நமக்குக் கொடுத்த மந்திரப் பத்திரத்தை இப்போது உபயோகித்தால் என்ன?” என்று தோன்றியது.  உடனே தன்னிடமிருந்த மூன்று பத்திரங்களில் ஒன்றை எடுத்து சுவரில் ஒட்டி, அதன் உதவியை நாடினான்.

“ஓ.. அதிர்ஷ்ட பத்திரமே.. நீ சூன்யக்காரிக்கு என்னைப் போல் பதில் சொல்..” என்று சொன்னான்.

கயிற்றினை நொடியில் பிரித்துக் கொண்டு தப்பித்து, உடனே அங்கிருந்து கல்விக்கூடத்தை நோக்கி முயன்ற அளவு வேகமாக ஓடினான்.

மாணவன் இன்னும் உள்ளே இருக்கிறான் என்று எண்ணி, சில நிமிடங்கள் கழித்து, “சிறுவனே.. என்ன இன்னும் முடிப்பவில்லையா?” என்று சூன்யக்காரி கோபத்துடன் கத்தினாள்.  “இதோ வந்து விட்டேன்” என்று மாணவனின் குரலில் மிகவும் பணிவுடன் மந்திரப் பத்திரம் பதில் கூறியது.  மூன்று முறை இதே பதில் வரவுமே, சூன்யக்காரிக்கு சந்தேகம் வந்து, கடைசியில் பொறுக்க மாட்டாமல், அறையைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தாள்.  மாணவன் அங்கு இல்லை.  “பொடிப்பயல்.. என்னை ஏமாற்றி விட்டானே.. இதற்கு அவன் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று கோபத்துடன் வீட்டிற்கு வெளியே வந்தாள்.  இருட்டில் தூரத்தில் ஓடும் மாணவன் அந்தச் சூன்யக்காரியின் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தான். அவனைத் துரத்த ஆரம்பித்தாள்.
மூச்சிறைக்க சற்று தூரம் ஓடிய பின், “ஓ.. எப்படியோ தப்பித்தோம்..” என்று மாணவன் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பயத்துடன் திரும்பிப் பார்த்தான்.

“சிறுவனே.. நீ எங்கே இருக்கிறாயோ.. அங்கேயே நில்.. என் பசியைக் கிளப்பி விட்டாய். உன்னை இப்போதே நான் பிடித்துச் சாப்பிடப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டே துரத்தி வந்தாள்.  அதிகக் கோபத்தால் சூன்யக்காரியின் முகம் சிவந்து மிகவும் கோரமாகக் காட்சியளித்தாள்.

கோரமான முகத்தைக் கண்டு பயந்து மிரண்ட மாணவன், சுதாரித்துக் கொண்டு, “ஐயோ.. போச்சு.. அவள் என்னைப் பிடித்தால் தப்பிக்கவே முடியாது.. சாக வேண்டியது தான்..” என்று குரு தந்த இரண்டாவது பத்திரத்தை எடுத்து, “எனக்குப் பின்னால் பெரிய நதி ஓடட்டும்..” என்று வேண்டிக் கொண்டான்.
இதை அவன் வேண்டியதுமே, ஓடிக்கொண்டிருந்த அவன் பின்னால், திடீரென்று ஒரு பெரிய நதி தோன்றியது.  வேகமான நீர்ச் சுழலில் சூன்யக்காரி சிக்கிக் கொண்டாள்.  அதற்குள் மாணவன் தலை தெரிக்க ஓடினான். இன்னும் சிறிது தூரம் ஓடிய பின், “சூன்யக்காரி நிச்சயம் மூழ்கி இருப்பாள்.. அப்பாடா..” என்று நம்பிக்கையுடன் மாணவன் சற்றே நின்றான்.  அவன் அதை நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, சூன்யக்காரியின் குரல் மறுபடியும் கேட்டது.  சூன்யக்காரி தன்னுடைய மந்திரச் சக்தியால், நதியின் நீர் அனைத்தையும் உறுஞ்சிக் கொண்டு மாணவனை துரத்த ஆரம்பித்தாள்.

“ஓ.. வேண்டாம் வேண்டாம்.. இந்த முறை தீக்கடலை உருவாக்கு..” என்று தன்னிடமிருந்த மூன்றாவது அதிர்ஷ்டப் பத்திரத்தை வேண்டினான்.  திடீரென்று அவன் பின்னால் கடலென தீக் கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்தது. சூன்யக்காரியைச் சூழ்ந்து கொண்டது.  ஆனால் சூன்யக்காரியோ தன் சக்தியால், குடித்திருந்த அத்தனை நீரையும் உமிழ்ந்து, தீயை அணைத்தாள்.  மறுபடியும் துரத்த ஆரம்பித்தாள்.

“முடிந்தது என் கதை.. எப்படியோ கல்விக்கூடம் அருகே வந்து விட்டோம்.  அவள் வந்து பிடிக்கும் முன்னே உள்ளே சென்று விட வேண்டும்” என்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மேலும் வேகமாக ஓடினான்.  சூன்யக்காரி அவளை அடையும் தருவாயில்,  அவன் கூடத்தை அடைந்து விட்டிருந்தான்.  அங்கு கூடத்தின் முற்றத்தில் இரவு உணவு உண்டு கொண்டிருந்த குருவை நோக்கி ஓடினான். “ஐயா.. தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். மலைச்சூன்யக்காரி என்னைத் துரத்தி வருகிறாள்.” என்று அடிபணிந்தான்.
“ஓ.. நீ அவளைச் சந்தித்தாயா.. நாங்கள் சொன்னது புத்திக்கு எட்டியதா?” என்று கேட்டார் குரு.

மாணவன் நடந்ததை நினைத்துப் பார்த்தான். தலை தப்பிக்க குருவிடம் மன்னிப்புக் கோரினான். “என்னை மன்னித்து விடுங்கள் ஐயா.. நான் இப்போதிருந்தே திருந்தி விட்டேன்..” என்று சொல்லி காலில் விழுந்தான்.  அங்கிருந்த பெரிய ஜாடிக்குப் பின் அவனை ஒளிந்து கொள்ளச் சைகை செய்தார் குரு.  அவன் ஓடிச் சென்று ஒளிந்து கொண்ட அதே நேரத்தில், சூன்யக்காரி கூடத்தின் கதவைக் கால்களால் எட்டி உதைத்து உள்ளே நுழைந்தாள்.

“ஏய்.. இங்கு ஓடி வந்தச் சிறுவன் எங்கே? அவனை வெளியே அனுப்பு..” என்றாள் கோபத்துடன் சூன்யக்காரி.

குரு தன்னுடைய உணவில் கவனம் செலுத்துவதைப் போன்று நடித்துக் கொண்டே, “என்ன.. என்ன கேட்கிறாய்? நான் இங்கே வெறும் இந்த அரிசி ரொட்டிகளைத் தின்று கொண்டு இருக்கிறேன்.  நான் எதையும் பார்க்கவில்லை..” என்றார் மெத்தனமாக.

இதைக் கேட்ட சூன்யக்காரிக்கு பெருங்கோபம் வந்தது.
“உனக்குத் தெரியாதது போல் நீ நடிக்கலாம். எனக்கு அதைக் பற்றிக் கவலையில்லை.  ஏனென்றால் நீ அவனை எனக்குத் தரவில்லையென்றால், என் பசிக்கு நீ இரையாக வேண்டியிருக்கும்.. அவ்வளவுதான்..” என்று சொல்லிக் கொண்டே குருவை நோக்கி முன்னேறினாள்.
“சரி.. சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.  நீ தான் மலைச் சூன்யக்காரியா?” என்று கேட்டார் பொறுமையுடன்.

“ஆமாம்.. அதெற்கென்ன?” என்று சொல்லிக் கொண்டே மேலும் நெருங்கி வந்தாள்.

“உன்னை நான் வெகு நாட்களாக சந்திக்க வேண்டுமென்றிருந்தேன்.. இன்று தான் உன்னைப் பார்க்க முடிந்தது..”

“அதற்கென்ன.. பார்த்துவிட்டாயால்லவா?”

“இரு இரு.. முதலில் நம்மில் யார் இன்னொரு உருவத்திற்கு மாறுவதில் சிறந்தவர் என்று பார்த்த பின், நீ செய்வதைச் செய்யலாம்..” என்றார் குரு.
“ஏன் நான் தான் சிறந்தவள்.. அதிலென்ன சந்தேகம்?” என்று சற்றே நின்றாள்.
“அதை நிரூபிக்க வேண்டும்.  நீ ஜெயித்தால் நீ நினைப்பதைச் செய்யலாம்.  இப்போது நான் சொல்கிற உருவத்திற்கு உன்னால் மாற முடியுமா? அதை முதலில் சொல்..” என்று சவால் விட்டார்.

“என்னை கேலி செய்கிறாயா?” என்று மிகவும் தன்னம்பிக்கையுடனும் கோபத்துடனும் சொன்ன சூன்யக்காரி, “என்னை நான் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.  நீ விரும்பியதைக் கூறு.. நான் மாறிக் காட்டுகிறேன்” என்றாள் அகந்தையுடன்.

சூன்யக்காரி ஆணவத்தினால் அறிவிழந்து நிற்பதைப் புரிந்து கொண்ட குரு, “நீ இந்த உத்திரத்தின் அளவிற்கு உயரமாக முடியுமா?” என்றார்.  அவர் சொல்லி முடிக்கும் முன்பே, எந்தவித கஷ்டமுமின்றி, சூன்யக்காரி அப்படியே வளர்ந்து, உத்திரத்தைத் தொட்டாள்.

“ஊம்.. ஆனால் உன்னால் அந்த மலையளவு உயரம் நிச்சயம் ஆக முடியாது என்று அடித்துச் சொல்வேன்..” என்று சொல்லி அவளது கோபத்தை மேலும் தூண்டினார்.

“ஏய்.. நீ என்னை என்ன நினைத்து கொண்டிருக்கிறாய்.. இதெல்லாம் எனக்குக் கைவந்த கலை” என்று கூறிக் கொண்டே, தன்னை மலையளவு உயர்த்திக் காட்டினாள்.

குரு அவளது செய்கைக் கண்டு பிரமிப்பது போல் நடித்து, “நிச்சயம் நீ திறமைசாலிதான்.  சரி.. சரி.. நீ உன்னை பெரிதாக்கிக் கொள்வது வெகு சுலபம்.  ஆனால் மிகச் சிறிய பருப்பாக உன்னால் ஆக முடியாது என்று நான் அடித்துச் சொல்வேன்” என்று சூன்யக்காரியின் கோபத்தை மேலும் தூண்டி விட்டார்.
குருவின் கேலியால் எரிச்சலுற்ற சூன்யக்காரி, ஆத்திரத்துடன், “அது மிகவும் எளிது.. பார்..” என்று உடனே குருவின் விரல் உச்சி அளவு தன் உருவத்தை சுருக்கிக் காட்டினாள்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதைப் புரிந்து கொள்ளாத சூன்யக்காரி குருவின் தந்திரத்தை சற்றும் எண்ணிப் பார்க்காமல், மந்திரச் சக்தி இருந்த போதும், அவரது தந்திர வலையில் சிக்கினாள்.

“அடடா.. அடடா.. அபாரம்.. அபாரம்.. இப்போது என் முறை..” என்று சொல்லிக் கொண்டே குரு, சூன்யக்காரி சற்றும் எதிர்பாராத போது, திடீரென்று அந்த மிகச் சிறிய பருப்பை எடுத்துத் தான் உண்டு கொண்டிருந்த அரிசி ரொட்டியின் இடையே வைத்து, ஒரே வாயில் ரொட்டியைத் தன் வாயிலிட்டு மென்று விழுங்கினார்.

அப்போது முதல் காட்டில் மலைச் சூன்யக்காரி காணப்படவில்லை.
தான்தோன்றித்தனமும் ஆத்திரமும் எங்கு கொண்டு விடும் என்பதைப் புரிந்து கொண்ட
குறும்புக்கார மாணவனும் நல்லவனாக பண்புள்ளவனாக மாறி, குரு சொல்லிக் கொடுத்தவற்றை கவனத்துடன் கற்க ஆரம்பித்தான்.
.

செவ்வாய், 30 ஜூலை, 2013

வா.மு.கோமு கவிதைகள் இரண்டு



காதல் 2014

உனக்கு அவுக்கணுமாடி? இல்ல நொட்டணுமா?
இந்தப் பயல் உன் மீது மாயையான மோகத்தில்
இருக்கிறான் என்பதற்காக வாறி மடியில்
போட்டுக் கொண்டு..சாரி..துப்பட்டாவில்
முடிந்து கொண்டு எந்த நேரமும் டாக் இசி
உண்ணுவது போல..பன்றி கழுநீர் குடிப்பதுபோல..
ஐஸ்கிரீமிலிருந்து ரோஸ்மில்க் வரை
குடித்து முடித்து தியேட்டரில் பப்ஸையும்
பாப்கார்னையும் வெதுப்புகிறாயே! உன்னிடமிருப்பது
வயிறா? வன்னான் தாழியா? இதுபோக
பெர்த்டே வருதுன்னு காத்தால இருந்து மதியம்
வரைக்கும் உனக்கு புடிச்ச மிடியாம் கூடவே
அதுக்கான உள்ளாடைகளுமாம்! –மதியத்திலிருந்து
மாலைவரை இவன் வாய் சும்மாயிராமல் சொன்ன
சுடிதாராம்..அதும் உன்னிடம் இல்லாத
ரோசா நிறத்திலாம்! எவன் அப்பனூட்டுக் காசை
யாருடி திங்கறது! –தினமும் அவன் அப்பன்
முனிசிபாலிட்டி குப்பை வண்டி ஓட்டி
சம்பாதிக்கிற காசுடி! –ஆமா இவன் ஏன்
மண்டையில புலுத்து திரியறான்?
விமானத்துல போறவ கிட்ட
தண்ணி பாட்டலு கேட்ட மாதிரி!!

பிரிவு

எல்லாவற்றையும் நீ அப்படியே
போட்டுவிட்டு உனக்கான தேவைகளை
மட்டும் தூக்கிக் கொண்டு நீ ஏற்றுக்கொண்ட
புது வாழ்க்கை நோக்கி நடுநிசியில்
வாழப் போவதாய் நம்பி ஓடிப்போனாய்..
எனை அநாதரவாக விட்டு விட்டு!
அந்த இரவு நேரத்தைப் பற்றி நான்
யோசிக்கும் நாளில் நள்ளிரவில்
பெய்ய வேண்டிய மழை சற்றுப் பிந்தி
விடிகாலையில் பெய்யத்துவங்கிற்று!
நீ இல்லாத உன் தலையணையை
எரித்து குளிர்காய ஆயத்தமாகிறேன்!
()()()()()()()()()


க.தமிழினியன் படைப்பு


அமெரிக்கர்களே..அமெரிக்கர்களே..என்னைகடலில்தூக்கிப்போட்டலும்..
அமெரிக்காமாயதேசம்.பெற்றதகப்பனைக்கூடமறக்கஅடிச்சுரும்.''
-பிரிவோம்சந்திப்போம்,பாகம்-2ல்சுஜாதா
பி.இமுடித்துவிட்டுவெளிநாட்டில்மேல்படிப்புபடிக்கபழப்பசங்கஆசைப்படுவார்கள்அல்லதுபணக்காரப்பசங்களின்அப்பாக்கள்ஆசைப்படுவார்கள்.ஆனால்மத்யமர்குடும்பத்தைசேர்ந்தஎஸ்.மதுராந்தகி‘யு.எஸ்லஎம்.எஸ்படிக்கலாம்னுநினைக்கிறேன்பா’என்றதுஅவள்அப்பாசோலையப்பனிற்குஅதிர்ச்சிதான்.தங்கமீன்கள்டிரைலரைசமீபத்தில்பார்த்திருந்தவராஇருந்தாலும்ஜோசியரிடம்ஒருவார்த்தைகேட்டபின்கடல்கடந்துசெல்வதற்குமுன்குலதெய்வம்கோயிலில்கிடாவெட்டுநடத்திமகளைஅனுப்பிவைத்தார்ப்ரிட்டிஷ்ஏர்வேஷில்.
கேப்-ஜெமனைதந்த ஹச்1-பி விசாஆன்சைட்டில்யு.எஸ்சென்றுடென்வர்வெள்ளைக்காரர்களுக்குகும்பிடுறேன்சாமிசொல்லிக்கொண்டிருக்கும்அவ்யுக்த்ஜெயராமனிற்குமட்டும்தெரியும்எஸ்.மதுராந்தகியின்யு.எஸ்பயணத்தில்ஒருஅஹ்மார்க்காதல்ஒளிந்திருந்தது.
அவ்யுக்த்உலகசினிமாவாகநினைத்துவளர்ந்ததுஜெய்ஹிந்த்,செங்கோட்டைபோன்றபடங்களைதான்.அமெரிக்காவில்செட்டில்ஆவோர்களைதுளியும்மதிக்கமாட்டான்.எப்படித்தான்தாய்நாட்டைவிட்டுஅங்குபோய்இருக்காங்களோஎன்றுதிட்டுவான்.’எந்தையும்தாயும்மகிழ்ந்துகுலாவியநாடு’என்றுபாரதியைமேற்கோள்காண்பிப்பான்.மதுராந்தகி ’ரோஜா’ படத்தில்தேசியகொடியைதீயில்இருந்துகாப்பாற்றியகாரணத்திற்காகஅரவிந்த்சாமியின்ரசிகை.அமெரிக்காமோகம்உள்ளவர்களையும்,தாய்நாட்டைகேவலமாகபேசுபவர்களையும்இவளுக்குபிடிக்காது. எம்.ஐ.டியில்மதுராந்தகிமுதலாம்ஆண்டுபடிச்சபோதுஅவ்யுக்த்நான்காம்ஆண்டு.இதுபோதாதாகாதல்வருவதற்கு?
கேம்பஸ்இண்டர்வியூவில்தேர்வாகிகேப்-ஜெமனைஹைதராபாத்சென்றபின்புபோனில்காதல்கோட்டையானது.மாதம்ஒருமுறைசார்மிணாரில்சென்னைபயணத்தின்போதும்பேச்சுக்கள்அன்னாஹசாரே, பாபாராம்தேவ்,நதிகளைதேசியமயமாக்கணும்போன்றேயிருக்கும். மதுராந்தகிமூன்றாம்ஆண்டுமுடிக்கிறவரைக்கும்அவ்யுக்தின்செல்போனில்புரட்சித்தலைவரின் ’என்னவளம்இல்லைஇந்ததிருநாட்டில்ஏன்கையைஏந்தவேண்டும்வெளிநாட்டில்’ என்பதுதான்காலர்ட்யூன்என்றால்பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆனால்எல்லாம்மாறிப்போகபிள்ளையார்சுழிபோட்டதுட்வின்பீக்ஸ்பார்.அந்தநாள்வரைஸ்கூல், கார்பரேட்கம்பெனிகளில்யூனிஃபார்ம்அணிந்துமட்டும்பார்த்திருந்தஅவ்யுக்த்திற்குயூனிஃபார்மைஒரேஅளவில்தைத்துஅதற்குதகுந்தபல்பிகளைமட்டும்வேலைக்குஅமர்த்தும்இடமானட்வின்பீக்ஸ்முக்திதந்தது.ரெண்டுமக்பீர்உள்ளபோனவுடன்அமெரிக்காவைபுகழஆரம்பித்தான்ராகவனிடம்.
டென்வரில்சுலேகா.காம்வழியாக”வீட்டில்மட்டும்நீங்கசைவம்சாப்பிடணும்” என்றகண்டிசனோடுகிடைத்தஆச்சாரமானஅறைத்தோழன்ராகவன்சாம்பமூர்த்தி.
0 0 0 0 0 0
மதுராந்தகிசோலையப்பனாகபோல்டரில்இருக்கும்யுனிவர்சிட்டிஅஃப்கொலராடோவில்சேர்ந்தவள்கொஞ்சநாட்களில்மகியாகமாறிப்போனாள்.
அப்பெயரில்முதன்முதலாககூப்பிட்டதுஅவளுடையஅறைத்தோழிகல்பனாபுளபகா.
அவள்அமெரிக்காவந்து 3 மாதங்கள்ஆகிறது.ஏர்போர்ட்பிக்அப்கூடசெய்யலை.சிகாகோவில் 3 மாதம்க்ளைண்ட்கன்சல்டிங்கில்மாட்டியிருந்தஅவ்யுக்த்முதல்முறைநேரில்பார்க்கசெல்கிறான்இன்று.
அதற்காகடொயோட்டாகேம்ரேஅல்லதுஹோண்டாஅக்கார்ட்களாகநிரம்பியிருந்தஅப்பார்ட்மெண்ட்டில்ஃபோர்ட்மஸ்டாங்சிவப்புவண்ணலேட்டஸ்ட்மாடல்காருக்குமாறியிருந்தான்அவ்யுக்த்முதல்முறையாகமதுராந்தகியைஉட்காரவைத்துகூட்டிட்டுபோகணும்என்றுஆசையில்.
’என்னஓய்எதும்பல்பிஉஷார்பண்ணுறியா?’திடீர்மாற்றம்சந்தேகம்தந்ததுராகவனிற்கு ‘அப்படியேபுதுவண்டிலதியேட்டருக்குபோலாமாஓய். சிங்கம் -3 ரிலிஸ்ஆகியிருக்காம்’
’இல்லபடம்மொக்கைணுகேள்விபட்டேன்நெட்லபார்த்துக்கலாம்.’என்றுஅவ்யுக்த்சொன்னதுசந்தேகத்தைவழுவூட்டியது.
மதுராந்தகியைபார்த்ததும்வயிற்றில்ஓடும்அந்தபழையபட்டாம்பூச்சிபறக்கவில்லை.கூகுள்ஹேங்அவுட்டில்சூப்பராகதோன்றும்மகிவெஸ்டர்ன்ஃபார்மல்,ஃபிரிஹேர்,கட்சூவிலும்கூடஇப்பசுமாராகவேதோன்றினாள்அவன்கண்களுக்கு.பேசஆரம்பித்தமகிதனதுஅறைத்தோழிஸ்டார்பக்ஸ்வெளியேநின்றுவைஃபைஉபயோகப்படுத்துவது, ஆம்ஆத்மிகட்சிமுதல்நேற்றுஇரவுபார்த்தபேஸ்பால்மேட்ச்வரைவிவரித்தாள்.அமைதியாககேட்டுவந்தஅவ்யுக்த்அவளின்பேச்சைநிப்பாடி..
”ஆந்திராலஇருக்கிறஎல்லாவிவரமானவர்களும்இப்பஇங்கதான்இருக்காங்கனுஎன்ரூம்மேட்அடிக்கடிசொல்லுவான்.என்னதான்பிராடுதனமாஇருந்தாலும்இந்தியமக்கள்தொகையைகுறைக்கஅவுங்கநடவடிக்கைஎடுக்கிறதுபாரட்டவேண்டும்.”
”மக்கள்தொகைதான்இந்தியாவின்பெரியபிரச்சனைஅவுங்கஎன்னடாபண்றாங்க..கருத்தடைசாதனங்களா?”என்றாள்மகி
’ச்சீ..இந்தியாவில்எவ்ளோநாள்முன்கல்யாணம்செய்துகொண்டாலும்குழந்தைபெற்றுக்கொள்வதுஇங்கவந்தபின்னாடிதான்’அப்படியே’உன்ரூம்மேட்குஇன்னும்கல்யாணம்ஆகலைதானே?’என்றுகேட்டான்.பதில்இல்லை.
இருவரும்கொலராடோமாநிலத்தில் 25 மைல்பக்கத்தில்இருந்தாலும்அதன்பின்புபோனில்மட்டும்பேச்சு,அதுவும்’நான்க்ளைண்ட்மீட்டிங்கில்இருக்கேன்.’’இப்பபிஸி.’’நான்உனக்குமெசேஜ்தர்றேன்.’’நான்வாய்ஸ்மெயில்செக்பண்ணுறதுஇல்லை.’எனக்குலைசன்ஸ்எக்ஸ்பயர்ஆகிருச்சு’போன்றநொண்டிசாக்குசொல்லிநேரில்சந்திப்பதைதவிர்க்கஆரம்பித்தான்.
அவள்இங்குவந்தபின்இந்தியாஎல்டிபில்மட்டும்தான்கம்மியானது.மற்றபடிவேறஎந்தபயனும்இல்லை.அவ்யுக்த்தைமீண்டும்சந்திப்பதற்குள் 3 மாதம்கடந்திருந்தது.
வீட்டிற்குவந்தப்பின்தனியாகஅன்றுநடந்தசம்பவங்களையோசித்துபார்த்தாள் .ரொம்பமாறிப்போய்டான்இவன்என்பதைஉணர்ந்தாள்மகி.
ஒருசெண்ட்நாணயம்ஒன்றுகீழேஅனாமத்தாககிடந்ததைபார்த்ததும்மகிஅதைஎடுக்கபிரயத்தனப்பட்டாள்..அச்செயலைதடுத்து “யு.எஸ்லயாரும்எடுக்கமாட்டாங்கநீயும்அமெரிக்கனாமாறனும்னாஅதைஎடுக்காத” என்றான்.
’ஏன்டா?1 செண்ட்னாநம்மூர்ல 50 பைசாக்குமேலஇருக்கும்ல’என்றாள்.
’அல்பநீஅதைகுனிஞ்சுஎடுக்கிறடைம்லஅதுக்குஅதிகமாசம்பளம்தர்றபோகுதுயு.எஸ்’என்றான்.
’நான்இங்கவந்ததேஉன்னைபார்க்கதான்.இந்தஊர்லஇருக்கவேபிடிக்கலை.வாதிரும்பபோயிரலாம்அங்கபோய்வேலைபார்த்துகலாம்.ஊரில்இருந்த 4 ஏக்கர்நிலத்தைவிற்றுப்ரோக்கர்கமிஷன்கொடுத்தமீதியைஎங்கஅப்பாபத்திரமாஎன்கல்யாணத்துக்காகவச்சிட்டுமாப்பிளைவேறதேடுறார்.யு.எஸ்லஇருந்துகூடரெண்டுஅல்லயண்ஸ்வந்திருக்குஅதுலஒருத்தர்ஐயர்.எனக்குஇந்தியாமாப்பிளைதான்வேணும்னுசொல்லிட்டேன்.அவர்அதைமதிக்கல, அதனாலநீதிரும்பவந்திரு.எங்கப்பாகிட்டபேசுநாமகல்யாணம்பண்ணிசந்தோசமாஇருக்கலாம்.’
’ஹாஹாஹா’சிரிச்சான்அவ்யுக்த்.’க்ரீன்கார்ட்லஇருந்துIRA அக்கவுண்ட்வரைக்கும்நான்ப்ளான்போட்டுட்டுஇருக்கேன்நீவேறஇந்தியாவுக்குவரச்சொல்ற.அதுலாம்ஆவறதில்லை.எனக்குஇனிநம்மூர்செட்ஆகாது. கொசு,வெயில்,தண்ணீர்பிரச்சனை, ஊழல், கரண்ட்கட்’ என்றான்.
’இங்கஎல்லாம்இருக்கு.ஆனஉன்கிட்டசுயநலம்மட்டும்தான்இருக்கு.போடா’ என்றாள்அவனைமுதல்முறையாக
0 0 0 0 0 0
”ஊரில்ஐயர்லபொண்ணேகிடைக்கமாட்டிங்குதுஓய்.எல்லாம்மத்தவாஉஷார்பண்ணிட்டாநாங்கலாம்என்னபண்றது?நானும்கேஸ்ட்நோபார்னுவீட்லசொல்லிட்டேன்”என்றுஅறிமுகமானமுதல்நாளேஅவ்யுக்த்திடம்சொன்னராகவன்நல்லமூளைக்காரன்.ஆந்திரபசங்களைபிடிக்காது.
ஒருமுறைபிடிக்காததற்குஅவர்களின்படங்களாஎன்றுகேட்டதற்கு.
’விசாஎக்ஸ்டன்ஸன்செய்யாமமெக்ஸிகோசென்றுதிரும்பவந்து i-94 ல்தேதிமாற்றும்திறமைஉள்ளதா?அதைவைத்துக்கொண்டுலைசன்ஸ்வாங்கமுடியுமா?இல்லஒருவருசத்திற்குமுந்தையபில்வாங்கிடிவிக்குகஸ்டம்ஸ்கட்டாதஃப்ராடுவேலைதெரியுமா?ஐபோன்ஆப்பிள்கேர்+ போட்டுவாங்கிகொஞ்சநாளில்சுட்ச்ஆஃப்பண்ணிஇந்தியாவிற்குஅனுப்பிட்டுஇங்கதொலைந்துவிட்டதுனுபுதுசுவாங்கதில்இருக்கா?இல்லைலஅதனால்தான்அவர்கள்மேல்பொறாமைகலந்தபிடிக்காது’ என்றான்ராகவன்.
தன்னைதைரியமான, முற்போக்குவாதியாககாண்பிக்ககெட்டவார்த்தைகள்பேசுவான்,ஜிம்செல்வான். யு.எஸ்ஜிம்களில்முதல்மாதம்இலவசம்என்பதால்அவ்யுக்த்வந்த24மாதங்களில் 12 ஜிம்மாறியிருந்தான் ராகவன்.12 மாதம்ஜிம்போகலை.
முதல்வருடத்தில்அவனுக்குசற்றும்சளைத்தவனில்லைஅவ்யுக்த்.ட்ரிம்மிங்மிஷின்னில்அவனுக்குஅவனேமுடிவெட்டிக்கொள்பவன்தான்.ஆனால்சாப்பாட்டுவிசயத்தில்மட்டும்கஞ்சனில்லை36 பீஸ்பஃபல்லோவிங்ஸ்சாப்பிடுவான்என்றால்பாருங்கள்.ஃபூட்லாங்சப்வே ,சாண்ட்விச்,ஆம்லெட்,பர்கர்னுஎதுவாகஇருந்தாலும்அதில்இறைச்சிஇருப்பதைபார்த்துக்கொள்வான்.
சனி,ஞாயிறுஒருமுறைஅவ்யுக்த்லாஸ்வேகாஸ்போயிருந்தசமயம்மூன்றுவேலையும்கார்ன்ஃபிளாக்ஸ்மட்டும்சாப்பிட்டுவாழ்ந்தவன்ராகவன்.
25வது மாதம்ஊரில்ராகவனுக்குபொண்ணுரெடியாகியிருந்தது.ஜெ.சி.பென்னிலடிரஸ்எடுக்ககூட ”ரேட்ஜாஸ்திநான்ஊர்லரெங்கநாதன்ஸ்டிரீட்லவாங்கிறேன்ஓய்” என்பவன்மாமானார்தந்த 50 ஆயிரத்தில்சூட்வாங்கினான்.  ஊருக்குசென்றுகல்யாணம்முடித்துதிரும்பவந்தகையோடுஅந்தசூட்சரியில்லைஎன்றுரிட்டர்ன்செய்துவிட்டுபோல்டர்க்குடிரான்ஸ்ஃபர்வாங்கிமனைவிமகியோடுசேர்ந்துசுபமாககூகுள்ஹேங்அவுட்டால்கூட்டுகுடும்பமாகவாழ்ந்துவருகிறான்.
0 0 0
போடாஎன்றுசொன்னதில்இருந்துதொடர்புகுறைந்துஅடுத்த6 மாதங்களில்ஒருமுறைகூடபார்த்துகொள்ளவில்லைஇருவரும்.1 வருடபடிப்புமுடிந்துஇரண்டாம்ஆண்டுஆரம்பிக்கும்முன்விடுமுறையில்இந்தியாசென்றாள்மகி.ஊரில்வீட்டிலேஅடங்கியிருந்தாள்.”உள்ளேயேஏன்டிஉட்கார்ந்திருக்கஇந்தமார்கெட்வரைக்குமாதுபோயிட்டுவா”என்றாள்அம்மா.
இவளும்பெரியகடையைதேடிச்பார்த்துசென்றுகேட்டாள் ”ப்ராக்கோலிஇருக்குங்களா?”

0 0 0-  க.தமிழினியன்

ஞாயிறு, 28 ஜூலை, 2013

ராஞ்சனா- குற்றவாளியாக்கப்படும் நிரபராதி- கி.ச.திலீபன்




இந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் தவிர்க்கவியலாத இல்லை இல்லை தவிர்க்கப்படாத ஒன்று காதல். காதலை மையப்படுத்திய படங்கள்தான் பெரும்பாலானவை. காதல் என்பது கட்டாயமாக்கப்பட்டு விட்டது போல வணிக சினிமாக்கள் ஒவ்வொன்றும் கதைக்குப் பொருந்துகிறதோ இல்லையோ கதாநாயகியின் கால்ஷீட்டை வாங்கிக்கொண்டு ஒரு காதலாம் அதில் இரண்டு டூயட்டாம். இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது நம் சினிமா.

தமிழ் சினிமாவின் பார்வை, சிந்தனை மாறுகிறது என்றெல்லாம் சமீப காலமாக பேச்சு எழுந்து வருகிறது. என்றைக்கு டூயட்டை தவிர்த்து ஒரு படம் எடுக்கப்படுகிறதோ அன்றைக்குத்தான் தமிழ் சினிமா விளங்கும் என்பது இயக்குனர் மகேந்திரனின் ஆதங்கமாய் உள்ளது. வழக்கமான கிளிஷே காதல் காட்சிகளை நிரப்பிய படங்களைப் பார்த்து பார்த்து சலித்துப் போன மக்களுக்கு ஒரு புதிய காதல் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது ராஞ்சனா என்கிற அம்பிகாபதி. இந்தியில் நூறு கோடியைத் தாண்டி வசூலாகி வரும் படம்தான் ராஞ்சனா.

படத்தின் முற்பாதி காதல் கதை வழக்கன கிளிஷே காதல் போன்றுதான் காட்டப்படுகின்றது. வணிக சினிமாவுக்கே உரித்தான ஹீரோயிஸக் காதல் போல் கதை துவங்குகிறது. காசி நகரில் வாழும் புரோகிதரின் மகனான குந்தனுக்கு (தனுஷ்), இசுலாமியப் பெண்ணான சோயா (சோனம் கபூர்) மீது சிறு வயதிலேயே காதல் பற்றிக் கொள்கிறது. பள்ளிப் பருவத்தில் தன் காதலை சொல்லப் போகும் குந்தனை 15 முறை அறைந்த பிறகே சம்மதிக்க ஒப்புக் கொள்கிறாள். தான் இசுலாமிய இளைஞன் என்று பொய் சொல்லும் குந்தன் இந்து என்பது தெரிய வந்தது சோயா பிரிகிறாள். வழக்கம் போல குந்தன் கையை கிழித்துக் கொண்டு சிம்பதி உருவாக்கி காதலிக்க வைக்கிறான். காதல் விவகாரத்தால் சோயாவை ஆக்ராவுக்கு அனுப்பி விடுகின்றனர். குந்தன், சோயாவுக்காக எட்டு ஆண்டுகள் காத்துக் கிடக்கிறான். மீண்டும் காசிக்கு வரும் சோயாவோ டெல்லியில் தன்னுடன் படித்த ஜஸ்ஜித்தை அக்ரம் சைதி என்று இசுலாமிய இளைஞனாக பொய் கூறி திருமணத்துக்கு பெற்றோர்களை சம்மதிக்க வைக்க குந்தனிடம் கோருகிறாள். திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண நாளன்று அக்ரம் சைதி என்பவன் ஜஸ்ஜித் என்ற இந்து என்கிற உண்மை செய்தித்தாள் மூலம் தெரியவரவே அந்த உண்மையை குந்தன் உடைக்கிறான். இது முற்பாதி.

குந்தன் உடைத்த உண்மை எப்படிப்பட்ட மாற்றங்களை எல்லாம் உண்டு பண்ணியது என்பதுதான் பிற்பாதி. குந்தன் சொன்ன உண்மையால் ஜஸ்ஜித் சோயாவின் உறவினர்களால் தாக்கப்பட்டு இறக்கிறான். ஜஸ்ஜித் ஆரம்பித்த ஆல் இண்டியன் சிட்டிசன் பார்ட்டியின் தலைமைப் பொறுப்பை சோயா ஏற்கிறாள். தான் செய்ததை பெரிய குற்ற உணர்வாகக் கருதிய குந்தன் அதற்கு நிவாரணமாய் என்ன செய்தான் என்பதும் சோயா மீதான உண்மையான காதலை எப்படி நிரூபித்தான் என்பது சுவாரசியமான திரைக்கதைப் பின்னலில் சொல்லப்பட்டிருக்கிறது.

வழக்கமான காதல் கதைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு ஒரு புதிய கண்ணோட்டத்தோடு காதலை அணுகிய விதத்தில் இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவர். வணிக சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும் உள் இருந்தாலும் தன் திரைக்கதை நேர்த்தியில் அதை ஒரு நல்ல சினிமாவாகவும் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் எல்.ராய். ராஞ்சனா மீதான எதிர்பார்ப்புக்கு முதன்மைக் காரணம் தனுஷ். இன்றைய நடிகர்களில் தனக்கான உடல் மொழியோடு, எப்பேர்பட்ட கதாப்பாத்திரத்துக்கும் பொருந்தி தன் இயல்பை நடிப்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்ப்பவர் தனுஷ். நம் எதிர்பார்ப்பை சிறிதளவும் ஏமாற்றமாக்காமல் இன்னும் இன்னும் நமது பாராட்டுகளுக்கு சொந்தக்காரராகிறார். பள்ளிப் பருவ மாணவ வேடத்துக்கும் பொருந்திப்போகிறது தனுஷின் உடல் மொழி. ஒரு தலைக் காதலில் திளைக்கும் காட்சியில் நம்மை சிரிக்க வைக்கும் தனுஷ் பிற்பாதியில் நம் உணர்வுகளோடு ஒன்றிப்போகும் ஒரு நடிப்பைக் கொடுக்கிறார். “சோயா நீ திரும்பவும் ஒரு முஸ்லீம் பையனை இந்துன்னு சொல்லிக்கிட்டிருக்க” என்று சொல்லும் க்ளைமேக்ஸ் காட்சியில் அவ்வளவு உணர்ச்சிகள் பீறிடுகின்றன.

சோனம் கபூரும் சளைத்தவரல்ல என்பது போல் தனுஷ்க்கு போட்டியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இரட்டை சடை பின்னிக் கொண்டு துள்ளல் மிகுந்த மாணவியாய் வலம் வரும் இடமாகட்டும், தனுஷின் வளர்ச்சியை ஏற்க மனமின்றி நிராகரிக்கும் இடமாகட்டும், தனுஷை வீழ்த்த நாடகமாடும் இடமாகட்டும் அவ்வளவு இடங்களிலும் நடிகையாக தன்னை நிலை நாட்டுகிறார்.

பின்னணி இசை படத்தின் முக்கிய பலம். அந்த விதத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டுக்குரியவர். தமிழ் ரீமேக்கிங்கில் வைரமுத்துவின் வரிகள். ஜான் மகேந்திரனின் வசனங்கள் என அனைத்திலும் ஒரு நிறைவான அனுபவத்தையே தருகிறது அம்பிகாபதி.

கதாப்பாத்திரங்களுக்கு இடையிலான முரணை பற்றி பேசுவோம். படத்தின் இறுதி வரை குற்றவாளியாக காட்டப்படுபவன் குந்தன். சோயா தான் விரும்பும் ஜஸ்ஜித்தை இந்து என்கிற உண்மையை உடைத்ததால்தான் ஜஸ்ஜித் இறக்கிறான்; எனவே ஜஸ்ஜித்தை கொன்றது குந்தந்தான் என்பது சோயாவின் வாதம். ஆல் இண்டியன் சிட்டிசன் பார்ட்டி என்கிற ஒரு சமூக மாற்றத்திற்கான அமைப்பை கட்டமைக்கும் ஜஸ்ஜித், இந்து- இசுலாமிய மதத்தடைகளை மீறி சோயாவை மணந்திருக்க வேண்டுமே தவிர்த்து இந்த நாடகத்திற்கு ஒப்புக் கொள்ளக் கூடாது. இந்துவை திருமணம் செய்யப் போகிறேன் என்கிற உண்மையை சொல்லக் கூட பயக்கும் சோயாதான் படத்தின் முக்கிய குற்றவாளி. ஒரு தலையாக காதலிக்கும் குந்தனிடம் சோயா, ஜஸ்ஜித் மீதான காதலை மட்டும் விளக்காமல் குந்தனை நிராகரிப்பதற்கான காரணங்களில் குந்தன் ஒரு இந்து என்கிற காரணத்தையும் சேர்க்கிறாள். தன்னை இந்து என்கிற காரணத்தால் புறக்கணித்த சோயா, தான் இசுலாமியன் என்று பொய்யுரைத்ததற்காக பிரிந்து போன அதே சோயா ஒரு இந்துவை இசுலாமியனாக்கி திருமணம் புரிவதை குந்தனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போவதற்கு சோயாவேதான் காரணம்.

ஜஸ்ஜித் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறான் என்றால் மதப்பிரிவினைவாதத்தின் மீது திரும்ப வேண்டிய கோபம் சோயாவுக்கு குந்தன் மீது திரும்புகிறது. குந்தனும் தான் பெரிய குற்றத்தினை செய்து விட்டதைப் போல் குற்ற உணர்ச்சியில் துடிக்கிறான். குந்தனை திருடனாக பிடித்து வைத்துக் கொண்டு அவன் ஏன் திருடனானான் என்பதை கேட்கும் ஒரு காட்சியில் போதாமையற்ற அரசியல் அறிவுடைய அமைப்புகள் குறித்து மெல்லனவே விமர்சிக்கப்படுகிறது. ஊர் மக்களிடமிருந்து போலீஸ் ஒருவரை மீட்டு வந்தது குறித்து குந்தன் விளக்கும் காட்சியில் பார்ப்பனிய அரசியல் ஓரிரு வரிகளில் விமர்சிக்கப்பட்டு நகர்கிறது. ஆல் இண்டியன் சிட்டிசன் பார்ட்டியில் தனுஷ் முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்கும்போது சோயாவின் இன்னொரு முகமும் வெளிப்படுகிறது. காழ்ப்புணர்ச்சி அல்லது சுய நல முகம் என்றே அதனைச் சொல்லலாம். “சத்தியமா எனக்கு இந்த நாட்டைப் பத்தியெல்லாம் கவலை இல்லை என்னைப் பத்தி மட்டும்தான்” என்று தான் சுயநலத்தோடுதான் இயங்குவதாக வெளிப்படையாக பேசுபவன் குந்தன். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே செயல்படுத்துகிறாள் சோயா. குந்தனை ஒழித்துக் கட்ட ஆளும் கட்சியுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்படுகிறாள். இதெல்லாம் தெரிந்தும் கூட குந்தன் சோயாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு பேரணிக்கு செல்லும்போது தாக்கப்படுகிறான். குந்தன் தனக்கு செய்ததாய் எண்ணும் அதே துரோகத்தை சோயா குந்தனுக்கு செய்கிறாள். குந்தனின் உண்மையான காதல் புரியவு குற்றவுணர்ச்சியால் துடிக்கிறாள்.

பேரணியில் சுடப்படும் குந்தன் மரணிக்கிறான். இசுலாமிய நாடகம் போடச்சொல்லி ஜஸ்ஜித்தின் மரணத்திற்கு காரணமாய் இருப்பவளும், சுய நலம் என்கிற போர்வைக்குள் புதைந்து கொண்டு குந்தனைக் கொன்றதும் சோயாவேதான். ஆனால் இறுதிக் காட்சி வரை குற்றவாளியாக்கப்பட்டிருப்பவன் குந்தன். தான் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் கூட பேரணிக்கு செல்லும் குந்தனின் காதலுக்கு முன் மதத்தடையை தகர்த்தெறிய தைரியமற்ற சோயாவின் காதல் தோற்றுப் போகிறது. “ஒரு நாள் திரும்ப வருவேன் கங்கைக் கரையில் உடுக்கை வாசிக்க, காசித்தெருக்கள்ல றெக்கை கட்டிப் பறக்க மறுபடியும் ஒரு சோயாவைக் காதலிக்க" என்று ஓடும் எண்ண அலைகளுடன் முடியும் படம் நம்மிடத்தே சிறு சலனத்தை ஏற்படுத்திச் செல்கிறது.

- கி.ச.திலீபன் நன்றி: கீற்று வலைத்தளம்

அன்புச்செல்வன் கவிதைகள்

குடியின்றி அமையா வாழ்வு


அதன் நெடி தாள முடியாததாய் இருக்கிறது.
அதன் சுவை குமட்டலாய் இருக்கிறது.
தாள லயமிழையும்
மதுவின் இசையில்
வெளி பரவிய போதையின்
விரல்கள் அதிரும்
நரம்புகளூடான மயக்கம்
ஸ்தூல ரூபம் மிதக்க
மிதந்தவை சிதறும் கட்புலம் மீறி
நினைவு வழிப்பாதையில்
கால்பாவ ஏதுமின்றி
நினைவின்றி போகும் கணங்கள்
'காலமும் அடையாளமும் அற்றுப்
போகிறோம்' வருந்திய சிவா
எத்தகைய பேறு அது
ஒன்பதாவது அவுன்சில்
கோப்பையாகிப் போனேன்

ஆளில்லா லெவல் கிராசிங்


துருவேறிய ஒரு தொலைபேசிக்
கூச்சலுக்காய் காத்திருப்பு
மான அவமானங் கடந்த
திட்டுகளூடே கேட் மூடல்
பற்றிக் கொள்ள யாருமற்ற
ரயிலின் கூச்சலை
துணிந்து ஊடேகி
நடத்திச் செல்லும் பூச்சி
தாழ்வாரங்களூடாகவும்
பனைமரங்களூடாகவும்
கடந்து சென்ற வாழ்க்கை
எதிரொளிக்கும்
அவனது
கஞ்சா மின்னும் கண்களில்.


SUNRISE

நிறமழித்து எழுதி அழித்தெழுதி
அலையும் அலைகளில்
எச்சில் நுரைகளில்
பொங்கித் ததும்பும்
சங்குகளும் சிப்பிகளும்
ஒரு ரொமாண்டிக் கவிதைக்கான தொடக்கம்
கிழித்தெறியப்படுகிறது
விரல் நக அழுக்கால் ஆன
கவிதையால் சூல் கொண்டன
சங்குகள்
காற்றில் ஒளிரும் மணல் துகள்களினூடாக
நீ என்ன சாதி என்றொருவன்
கேட்பானாயின்
முத்தின் நொறுங்கல்களாய்
சிதறி ஒடுங்கும் குரல்கள்
ஒரு வேளை டீக்காக
சங்கு விற்கும் கிழவனிடம்
பேரம் பேசுகையில்
உதிக்கும் செஞ்சூரியன்
ஒரு கோடி கைதட்டல்களுடன்

உருமாற்றம் () சிதைவின் வரலாறு

எனக்கான வாழ்க்கையிது
உனக்கென்று வாய்த்ததொன்று
என்னை மூர்ச்சையிக்க
எனதை அருவருக்க
கரப்பானாய் மாறச் சபி.
பறந்து திரிவேன் சிறகடித்து
கக்கூசெங்கும்...
கழிவறைகள் கவிதையறைகள்
மலம் தள்ளிய நீ
வெருளுவாய்
உன் மலமீதேகி
நான் வருடுவது
உன் வாழ்வெனும் குண்டியை...
நீ ஊற்றிய
சரித்திரத்தின் நீரின் ஊடே
மலத்தின் கசடு பற்றி
மெதுவாய் தலை நிமிர்ந்து
துவாரத்தின் வாயிலில்
எனது மீசை துளாவிய போது
உனது கண்களின் மிரட்சி
எனக்கான ஹேஸ்யம்.
அறையெங்கும் தெளித்த விந்தும்
கருப்பந்தும் உணவாகியது
உனது மலச்சிக்கலின் போது
நீ மீண்டும் கூறுகின்றாய்
உலகம் கவிதையிலானது
என்று கழிப்பறையிலிருந்து
என் இடது முட்கால்
நீ காரித் துப்பிய சளியைச்
சுரண்டியபடி சொல்கிறது
உலகம் கழிப்பறையிலானது.


கண்டக்டர் அருகில் வர
நேரமிருக்கிறது.
                                                                                         
கோதுமை விளையும்
உன் மண்ணின் துகள்களோடு
சிரிக்கிறாய் நீ
நம் ஸ்நேகங்களை எண்ணி;
நானும் கூட -
விதை நெல்லின் வாசனையோடு.
கட்டுப்பாட்டு எல்லையற்ற
பெருவெளியில் நினைவுகளோடு
அலைந்து திரியும் நாம்
இளைப்பாறும் ஏதோவொரு கிராமத்தில்
பஞ்சாயத்து டி.வி.யில்
8 P.M. ஸ்காட்ச்சோடு
பகிர்ந்து கொள்வோம்
உணர்வுகளை
பீரங்கிக் குண்டுகளால்
வெடித்துச் சிதறடிக்கப்படும் வரை.

            நெருங்கிவிட்ட கண்டக்டருக்கு
            சில்லறை தேடிக்கொண்டிருக்கிறேன்
            நான்.