ஞாயிறு, 17 நவம்பர், 2013

நர்சிம் படைப்பு

வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா,

"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா? "

மனைவியின்,இந்த வரிகளை நயமாக எழுதி இருந்தாலும், சிச்சுவேசன் என்னமோ சுப்ரமணியபுரம் படத்தில் அண்ணி பேசும் டெரர் டயலாக்குக்கு ஈக்குவலானது.. தட்டுக்கும் தோசைக்குமான இடைவெளி அதிகம் இருந்தது. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்,‘தோசை பறந்தது’. அடுத்து தோசைக்கல்லே பறக்கும் என்றாகிவிடுமோ என்ற அச்சத்தில்.. “என்ன இப்பிடி சொல்லிட்ட..உன்னைப் பத்தி எவ்வளவு எழுதி வச்சுருக்கேன் தெரியுமா?” என்று சொல்லிவிட்டு.விட்டு,ட்டு,டு..என்று விக்கி வெலவெலத்தாலும், சட்டை கிழியாமல் இருக்க, இந்த இரவை அவளுக்கான கடிதமாய்...

******

நீ வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா,

என்மீதான உன் காதல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் பிடித்தம் மிகப் பிடிக்கும்...

எங்கே, எப்பொழுது, ஏன், தர்க்கம், நியாயம், துரோகம், என எந்தவிதமான வார்த்தைகளுக்கும் கட்டுப்படாமல்..ஒரு காற்றின்,சுதந்திரக் காற்றின்,புனித பிம்பம் போன்றானது நம் காதல் என்று உணர்ந்த தருணம் மீண்டும் நான் பிறந்த தருணம். ஏதோ ஒரு சொந்தக்கார திருமணத்தில் நீ நிற்கும் இடங்களிலேயே நானும் நின்று, மூலை முடுக்கில் இருந்து ஆங்கிள் வைத்து உன்னைப் பார்த்துப் பார்த்து, ஹும்ம்ம்.

கல்யாணவீட்டின் வழக்கமான ஏதோவொரு அலட்டல் மாமாவிடம்.. “பெரியம்மா பொண்ணுதானே அவங்க” என்று சந்தில் சிந்து பாடி, “யாருன்னு தெரியலயாடா.. உங்க சாந்தி அத்தைப் பொண்ணுடா அது” என்று அவர் பால் வார்த்தார்.

அதன் பிறகு உன்னைப் பார்க்க உன் வீட்டிற்கு நான் வந்த அந்த சனிக்கிழமை என்னில் இன்னும்.

சனி பிடித்தது என்பதற்கு அர்த்தம், சனியை மிகப் பிடிக்கும் எனக்கு என்பதாயும் மாறியப் போனது அன்றில் இருந்துதான்.

உன் கண்கள் தான் நான் முதலில் பார்த்தது. கடைசிவரை என்கூட வரப் போகும் கண்கள் என்பதையறியாமல்... அந்தக் கண்கள் பார்த்து நான் பேசியது உனக்குப் பிடித்திருக்கக் கூடும்.என்றாலும் உன் மீதான காதல் வாய்த்த தருணம் நீ என்னை விட்டு மறுநாளே ஊருக்குப் பயணித்தது தான். உன் கண்கள் எனக்குப் பிடிக்கும் என்று தயங்கித் தயங்கி நான் குறுஞ்செய்தி அனுப்பினேன்..‘மங்கை மான் விழிஅம்புகள் தங்கள் மார் துளைத்ததோ?’ என்று பதில் குறுஞ்செய்தியில் உன்காதலையெனக்குச் சொன்ன அந்த தருணம் இன்னும் இன்னும் இன்னும் இருக்கிறது இனிக்கிறது.

அந்த பதில் மட்டும் சற்று மாறியிருந்தாலும் ஐயமே என்பதனால், அதுவொரு நூற்றாண்டு நிமிடம்.

அதன்பின் அந்த ஞாயிறு முழுக்க முதல்முறையாக நான் உன்னோடு குறுஞ்செய்திகளாக என் வாழ்வை மெல்ல மெல்ல மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன் எனக்கேத் தெரியாமல்.அது ஒரு அபூர்வ ஞாயிறு என் வாழ்வில்.

அப்புறம் அன்றிரவு உன்னால் எனக்கு network problem, பதிலிடமுடியவில்லை என்றான அந்த இருவது நிமிடங்கள் நரக தண்டனைத் தருணங்கள் என்று உணர்ந்த அதேவேளைதான் நான் உன்னில் என்னை இழந்து விட்டேன் என்றுணர்ந்த தருணமும்.

திங்களன்றும் நீ அங்கே..என்ன நினைத்தாயோ.. “மொட்டைமாடிக்கு வந்து ஒரு நிமிடம் உங்க வாய்ஸ் மட்டும் கேட்க வந்தேன்” என்று நீ சொன்னதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவானது இவளுக்கு? என்னுள் நிகழ்ந்த அத்தனை மாற்றமும் இவளுக்கும் நிகழ்ந்து தொலைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன் அப்பொழுது.

செவ்வாய்.. காலையில் சட்டையை எடுத்துப் போடும் பொழுதே புன்சிரிப்பு என்னை ஆட்கொண்டது.உன்னைப் பார்க்கப் போகிறேன் என்ற சிரிப்பும் ஆவலும் கலந்து கண்ணாடி முன் எப்பொழுதுமில்லாமல் நிறையநேரம் நின்று பார்த்தேன். பின் போட்டிருந்த க்ரே சட்டையை கழற்றி விட்டு வெள்ளைக்கு மாறினேன். காதல் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.வெள்ளைச் சட்டையில் என்னை நீ பார்த்தப் பார்வை இன்னுமென்கண்ணில் இருக்கிறதடி கண்ணம்மா.

நீ ஒருவேளை எனக்கு முன் வந்து, ஒரு நொடி அங்கே காத்திருந்தாலும் உயிர்வலி எனக்கு ஏற்ப்படுமே,ஏனெனில் அந்த இடமும் அங்கு நிற்பர்வர்களைப் பற்றிய எண்ணமும் சமூகம் கொண்ட பார்வையும் இப்படி என்ன என்னமோ தோன்ற... ஒரே அழுத்து..அவ்வளவு வேகம் போனதில்லை நான்.. நீ சொன்ன இடத்தை அடைந்தவுடன்.. உனக்காக காத்திருக்கும்பொழுதே இன்னுமொரு சந்தேகம். ஒருவேளை முதல் ஸ்டாப்பிங்கில் இறங்கி விடுவாயோ என்று.. எதற்கு வம்பு என இரண்டிற்கும் நடுவில் நின்றிந்த அந்த நிமிடங்களில் எத்தனை சந்தோஷம் என்பதை எழுத இன்னும் தமிழில் வார்த்தைகள் கண்டுபிடிக்கவில்லையடி கண்ணம்மா..

தேவதையை சுமந்துவரும் திமிரில் அந்தப் பேருந்து என்னை க்ராஸ் செய்து போகும் பொழுது உன் அழைப்பும் வந்தது.. “ஹே உன்னப் பார்த்தேன்.. வா..” அந்த வார்த்தைகளில் உன் வாழ்நாள்மொத்த சந்தோஷமும் வழிந்தோடியது தெரியுமடி எனக்கு.

அடுத்த நொடி உன் முன் நான்.கண்முன் நீ. கருப்பு நிற சூடியில் தேவதையாய் இருந்தாலும் அப்போதைய என் தேவை உன் கரம் பற்றி கண்பார்ப்பதே..ஏனெனில் நம்மைப் பொறுத்தவரை 24 மணிநேரத்திற்கும் மேலான இடைவெளி என்பது ஒரு யுகக் கணக்காகிப் போனதால்..அதுவும் உன்னை பிரிந்திருந்த முதல் 48 மணிநேரத்திற்கும் மேலான நாள் என்பதால்..அந்தக் கைப் பிடிப்பும்..கண் பார்வையும்..

ரோட்டோர டீக்கடையைப் பார்த்ததும் என் கழுத்தில் கை வைத்து டீக்குடிக்கலாமா என்றாய்..மா என்ற எழுத்தை நீ சொல்லும்முன் அந்தக் கடை வாசலில்..அங்கும் கொஞ்சலாக வெளியில் நின்றே குடிக்கலாம் என்றாய். உன் தோள் உரசி நின்று குடித்த அந்த ஐம்பது பைசா டீ ஐந்து கோடி கொடுத்தாலும் கொடுக்கமுடியாத திருப்தியை கொடுத்ததுனக்குத் தெரியுமாடி?அதுவும் அந்த பிஸ்கட்டை தொட்டுத் தொட்டு நீ குடித்த அழகை நான் பார்த்துக் கொண்டிருக்க, நான் பார்த்த அழகை கடைக்காரன் பார்த்துக் கொண்டிருக்க. அதுவும் ஒரு பொன்நாள்.

பரஸ்பர போலித்தன்மை மயிரெல்லாம் மூட்டைக் கட்டி விட்டு, அந்த இரண்டு நாட்களில் என்னை உன்னில் இழந்ததை ஒரு அணைப்பில் சொன்னேன். உன் ஆமோதிப்பை அடரணைப்பில் உறுதி செய்தாய்.

திருமணத்தன்று உன் நெற்றியில் பொட்டிட்டபின்,என் வெட்கச் சிரிப்பில் நீ சிவந்து போனதுனக்கு நினைவிருக்கிறதா?

அன்று முதல் இன்று வரை உன்மீதான என்காதல் எவ்வளவு தித்திப்பாய் பயணிக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். சந்தேகமிருந்தால் என் உடலை அரிந்து ரத்தம் குடித்துப் பார்,தித்திக்கும் உன் நினைவுகளால் இனிக்குமென் இரத்தம்.

உன் மீதான என் காதல் இனி கூடுவதற்கு வாய்ப்பேதுமில்லை.ஏனெனில் இதை விட கூட்ட முடியும் என்று இருந்திருந்தால் அதை இப்பொழுதே செய்திருப்பேனே.

ஆக..

என் உணர்வின் உச்சம் நீ.. வாழ்க என் மீதான உன் காதல். அது மட்டுமே என்னை ஜீவித்திருக்கச் செய்யும் இனி.

மொத்தமாய் முத்தங்கள்,சித்தம் முழுக்க உன் நினைவுகள்
ரத்தம் முழுக்க உன் திசுக்கள்,இதயம் முழுக்க நீ.. என்றாலும்
நான் தானே நீ...

இப்படிக்கு,

காதலாய்,
காதலில்
காதலுடன்
காதலுக்கு
காதல்
கணவன்
-நன்றி : நர்சிம்

குழல்வேந்தன் படைப்பு -மெர்சியின் ஞாபகங்கள்

  அன்பு தோழர்களே, நமக்கெல்லாம் பெண்களைப் பற்றிய செய்திகளோ அல்லது தகவல்களோவென்றால் விருப்பமானதன்றோ?

பெண்களைப் பற்றிய சித்திரங்கள், வண்ணப் படங்கள், சிற்பங்கள், கவிதைகள், காவியங்கள், நாடகங்கள், என எங்கும் பெண்கள் எதிலும் பெண்களென்பதன்றோ நம்மவர்களின் விருப்பமும் தேர்வும். ஆடவர்களின் ஜட்டி விளம்பரம் தொடங்கி முகச் சவரம் செய்துகொள்ள ாடவர்கள் பயண்படுத்தும் பிலேடு விளம்பரம் வரை எல்லாவற்றிர்க்கும் நமக்கு ஒரு பெண்ணின் பிம்பமன்றோ வேண்டி இருக்கிறது. எனவே தோழர்களே நானும் உங்களோடு பெண்ணைப் பற்றியே பேசுவதென்று தீர்மானித்துள்ளேன்.

பெண்கள் மட்டும் இல்லை என்றால் கண்ணாடிகளுக்கு ஏது இத்தனை மரியாதை?ஆடவர்கள் பயன்படுத்தும் அழகுச் சாதனங்களுக்கு அர்த்தமோ அகராதியோ அட அவற்றின் பெயர்கள் கூட தெரிந்து இருக்குமா என்ன? ஒரு இளைஞனை முதல் முதலில் அன்றொரு நாள் சந்தித்தேன். அவன் முகம் மிகவும் வாட்டமாக இருந்தது. காரணம் கேட்டேன். சொன்ன பதில் இதுதான் {என்னப்பா அனியாயமா இருக்குது? என்ன எங்க அப்பா காலேஜுல சேக்கிறேன்னு சொல்லி இப்படி பெண்களே படிக்காத காலேஜுல சேத்துட்டாரே, ஐய்யோ இப்படிப் பட்ட காலேஜுன்னு தெரிஞ்சு இருந்தா நான் படிக்கவே ஒத்து இருந்திருக்கமாட்டனே. இது என்னடா இது காட்டு மிராண்டிங்க மட்டும் இருக்கும் எடத்துல நம்மள குடி இருக்க சொல்லராங்க? அடுத்த வருஷம் எதாவது ஒரு காரணத்த சொல்லி நாந் கோயெட் காலேஜுல சேரலன்னா நான் ஆண்பிள்ளையே இல்லை} என்று சபதமே எடுத்த ஒரு கல்லூரி இளைஞனை எனக்குத் தெரியும் நண்பர்களே. அந்த நண்பன் யார் எனக்கதை பண்ணுவது என்னுடைய நோக்கமல்ல. இந்த ஆண்களது உலகம் என்த அளவுக்கு பெண்ணின் வயப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டத்தான் மேர்ப்படியான நண்பனைப் பற்றி உங்களிடம் சொன்னேன்.

பெண்களது பெயரில் எழுதுவதில் நம் படைப்பாளரில் சிலருக்கு என்ன காரணத்தாலோ ஒரு கவர்ச்சி அல்லது போதை இருக்கும் போலத் தெரிகிறது. பெண்களோடு பேசுவது, பெண்களுக்கு குறுஞ்செய்தி, மின்மடல் அனுப்புவது, இத்தியாதி இத்தியாதி எல்லாம் சாதாரண சம்பவங்கள்தானே நமக்கு. ஆனால் யார் அவற்றைச் செய்கிறார்களோ அப்போது அவர்கள் அசாதரணமாகிடும் வேடிக்கையைப் பார்க்க ஒருவருக்கு கொடுத்து வைக்கணுமே. அடடா! ஓ! அடடா!
{நான் பேச வந்ததும் பெண்ணைப் பற்றி என்று உங்கள் இடம் சொல்லிட்டு பேச வந்ததைப் பேசாமஇருந்துட்டா எப்படிங்க?

நான் பேச வந்த பெண்ணுன்னா சாதாரணமான பெண் இல்லைங்க அவங்க. எப்படிப்பட்ட பெருமைக்கு உரிய பெண்னுன்னு நான் சொல்லப் போரத வச்சி நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. அதாங்க அந்த பெண்ணுப் பேரு மெர்சிங்க. மெர்சின்னா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமுங்க. என்கிட்ட நீங்க அட அந்த பெண்ண ஏன் உனக்கு பிடிக்கும்னு காரணம் கேக்கரது தெரியிதுங்க. அத தாங்க சொல்ல வர்ரேன். ஆனா சொல்ல எனக்கு கொஞ்சம் கூச்சமா இருக்குதுங்க. இருந்தாலும் சொல்லாமலும் இருக்க முடியலிங்க.

மெர்சி என்னவெல்லாம் செய்வாங்க தெரியுங்களா? நான் உடை களையரத அப்படியே படம்எடுப்பாங்க. அது மட்டும் இல்லைங்க. பிறந்த மேனியா குளிக்கிறது, சோப்பு போடரது, மீண்டும் சோப்புப் போக தண்ணியை மொண்டு ஊத்திக்கிறது, அப்புரம் ஒடம்ப தொடைக்கிறது, புதுசா தொவச்ச ஆடைய போட்டுக்கிறது, சாப்பிடரது, காப்பிக் குடிக்கிறது இப்படி நான் செய்யக்கூடிய எல்லாத்தையும் அவங்க படம் எடுப்பாங்க. அப்படி படம் எடுக்கிறதுல அவங்களுக்கு என்ன சந்தோஷமோ திருப்தியோ அது பத்தியெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. அட அவங்க என்நமட்டும்அப்படி படம் ெடுத்தாங்கனு சொல்லலிங்க. எங்க குழுவையும் அப்படித்தான் படம் எடுப்பாங்க. அப்போ எங்க குழுவ சேர்ந்தவங்கள்ள சிலரு {ஹோய் ஹோய் நம்மள போட்டோ புடிக்கிறாங்கடோய்} னு கூச்சல் போடுவாங்க. அப்படி செய்யரதுனால மெர்சியை எனக்கு ரொம்ப பிடிக்குமுங்க. இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு இருந்துச்சின்நா எப்படி இருக்கும் சொல்லுங்க?} {அது சரி!மெர்சி எப்படி? ரொம்ப அழகா?னு நீங்க கேக்குரது எனக்கு நல்லா புரியிதுங்க. அதுல பாருங்க!அழக ஆராதிக்காதவங்க யாருங்க? என்னப் பொருத்தவரைக்கும் அவங்க பேரழகிதாங்க. பொதுவா ஒரு பெண்ணுன்னு சொன்னா கால் தொடங்கி பூச் சூடிய தலை முடிவரைக்கும் ஒரு பெண்ணோட ஒடம்பத்தாங்க எல்லாரும் பாக்கரீங்க. அழகுன்னா அது ஒரு பெண்ணோட ஒடம்புமட்டும் சார்ந்ததான்னு நெசமாவே எனக்குத் தெரியாதுங்க. எந்த பெண்ண எந்த ஆண் பார்த்தாலும் பொதுவா ஒல்லியா? குண்டா? குட்டையா? நெட்டையா? கருப்பா?செவப்பா? இல்ல மாஞ்தளிர்மேனியா? உடுத்திட்டு இருக்கும் உடை அந்த பெண்ணுக்கு எந்த அளவுக்குப் பொருத்தம்? மார்க்கு எவ்வளவு போடலாம்? இப்படித்தாங்க பல ஆண்கள் கணக்குப் போடுவாங்க. நானு அப்படி எல்லாம் போட்டதில்லிங்க. அப்படிப் பட்ட பழக்கமும் எனக்கு கிடையாதுங்க. அதுமாதிரி செய்யருதுல எனக்கு விருப்பமும் இருக்குரதில்லிங்க.

ஆனாலும் சொல்லுரேங்க! யாருக்கு எப்படியோ எனக்குத் தெரியாதுங்க. மெர்சி எனக்கு அப்போவும் அவங்களப் பத்திப் பேசிக்கிட்டு இருக்குர இப்போவும் எப்போவும் அவங்க அழகானவங்கதாங்க.

நான் மெர்சியோட அதிகம் பேசினது இல்லிங்க. எதோ ஒண்ணு ரண்டு சந்தர்ப்பங்கள்ள வெட்கத்தோட எனக்கு சொல்லித் தரப்பட்ட கொச்சை இங்கிலீஷ்லியோ மழலைத் தமிழ்லியோ பேசினது உண்டுங்க அப்போவெல்லாம் அவங்க அன்போடையும் கொஞ்சலாவும் என் கன்னத்தை வலிக்காம கிள்ளனதுண்டுங்க. அவங்களும்என்னோட அதிகமா பேசினது இல்லிங்க. எப்போவாச்சும் அவங்களுக்குத் தெரிஞ்ச கொச்சைத் தமிழிலியோ இல்லன்னா இங்கிளீஷ்லியோதாங்க பேசுவாங்க. அவங்களோட மொழி எனக்குப் புரிஞ்சதோ இல்லையோ? ஆனா அவங்களோட பேச்சில இருக்குர ஏத்த இரக்கத்த வச்சி அவங்களோட நேசத்தையும் கனிவையும் என்னால உணரமுடிஞ்சுதுங்க.
.
எனக்குத் தெரிஞ்சிஅவங்கதாங்க மொதல் மொதல்ல எனக்கு அரிமுகம் இல்லாத பழவகைகள சாப்பிடத் தந்தவங்க. அது மட்டும் இல்லிங்க. அவங்கதாங்க என்ன மொதல் மொதல்ல பேச வச்சி டேப்ரிக்காடுல என்னோட கொரல எனக்கே கேக்க வச்சாங்க. மொதல்ல என் கொரல கேசட்டுல அவங்க ஓடவிட்டப்போ இது எனடா இது நம்மளோட சத்தம்தானான்னு ரொம்ப பிரம்மிப்பா இருந்துச்சிங்க. ஆனா கொஞ்ச நேரம் பொருத்து என்னோட குறிப்புப் பேர சொல்லி பாடுன்னுஎனக்குப் புரிரமாதிரியான முறைல இங்கிலீஷ்ள கேட்டாங்க. அப்போ எனக்குவெக்கமா போயிடுச்சிங்க. நான் அவங்க இருந்த ரூமவிட்டுட்டு நான் இருக்கவேண்டிய ரூமுக்கு ஓடியே போயிட்டேங்க. என்னத்த சொல்லரதுங்க. அவங்க எனக்கு வச்ச செல்ல பேர நெனைக்கிறப்போ இப்பவும் சிறிப்பாவும் சிலிர்ப்பாவும் இருக்குதுங்க. அதுதாங்க எனக்கு அவங்க வச்ச பேரு [shy boy] என்ன எப்போ கூப்பிட்டாலும் ஷைபாய் ஷைபாய் அப்படின்னுதான் கூப்பிடுவாங்க. இல்லன்னா ரோசி ரோசின்னு கூப்பிடுவாங்க. ரோசின்னு கூப்பிட்டத்துக்கு ஒரு காரணம் இருக்குதுங்க. அத நீங்களே தெரிஞ்சிக்குவிங்க. மொதல்ல அவங்க எங்க ,ஸ்கூலுக்கு வந்த அப்போ எஞ்க பாட்டு சாரு அவங்கள வரவேர்க்க ஒரு பாட்டு சொல்லிக் குடுத்தாருங்க. அந்த பாட்டோட பல்லவில ஒரு வரி மட்டுந்தான் இப்போ எனக்கு ஞாபகம் இருக்குதுங்க. {வண்ணமலர் சொலையிலே கூடிடுவோம். மெர்சி அம்மாவை வருக வருக என்று வாழ்த்திப் பாடிடுவோம்.} அப்படின்னு அந்தப்பாட்டை நாங்க ெல்லாரும் சேர்ந்து குழுவா பாடனும்னு சாரு சொன்னபோது கூட்டத்துல கோவிந்தா போடருதுதானேன்னு பாடிநேந். ஆனா தனியா பாடச் சொன்னா? அதனாலதான் எனக்கு வெக்கம் வந்துரிச்சி. ஆனா பாருங்க. அவங்க அதையே எனக்கு பேரா வச்சில்ல கூப்பிட்டு இருக்காங்க. எங்க ஸ்கூலுக்கு அவங்க மொதல்ல வந்த நாளை ஒரு நாளும் என்னால மறக்கமுடியாதுங்க. அவங்க வந்தவொடனே நாங்க அந்த பாட்டைடான்சு ஆடிக்கிட்டே பாடினோம். அதுக்காகஒண்ணாங்கிலாசு படிக்கிற புள்ளைங்கள்ள அஞ்சுபேரத்தான் தேர்ந்தெடுத்தாங்க. அதுல நானும் இருந்தேங்க. வரவேர்ப்பு பாட்ட பாடுர குழந்தைகளாகிய நாங்கள் எல்லாம் செடிகலாம். செடின்னாபூக்களை தரணுமாம். அப்படி செடிகளா வேஷம் போட்டு என் கூட ஆடினவங்களைக் கூட இப்போவும் என்னால சொல்லமுடியுங்க. பிறைமதிதாங்க சாமந்திப்பூச் செடி. தேன்மொழிதாங்க முல்லைப்பூங்கொடி. அமுதாதான் கனகாம்பரச் செடி. செல்வமூர்த்திதாங்க மல்லிப்பூச் செடி. நானுதான் ரோஜாச் செடியாம். மெர்சியம்மா வர்ரப்போ செடிகளா இருக்கிற நாங்க அவங்க அவங்க நிலைக்கு அடையாளமான பூங்கொத்துக்களை அந்த அம்மையாருக்குத் தரணுமாம். அவங்க வர்ரதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலையே எங்களுக்கு பாடவும், ாடவும், பூங்கொத்தை கொடுக்கவும், அப்புரம் வரவங்களைக் கை குலுக்கி வருக வருக வணக்கம்னு இங்கிலீஷ்ல சொல்லவும் சொல்லிக் குடுத்தாங்க. நாங்களும் சொல்லிக் குடுத்தமாதிரியே நல்ல ஆடிப் பாடிக் காட்டி வரவேற்றோமுங்க. குழந்தைகளாகிய ெங்களோட ஆட்டமும் பாட்டும் மெர்சிக்கு நிச்சயம் ரொம்ப பிடிச்சி இருக்கனும். அவங்க வந்த அண்ணைக்கிஎல்லாருக்கும் ஆரஞ்சு பழம், திராட்சை, ஆப்பிள்னு ஏதேதோ பழங்களெல்லாம் குடுத்தாங்க. அதுல விசேஷம் ென்னன்னா டான்சாடின ெங்களுக்கு அண்ணமாரைவிடவும் அக்காமாரைவிடவும் அதிகமா மிட்டாய்களும் பழங்களும் குடுத்தாங்க. ஆனா பாருங்க. தநம் அக்கா எனக்கு பழங்களும் மிட்டாய்களும் குடுத்தப்போ {தம்பி உன்னால இவ்வளவையும் தூக்கமுடில இல்லைடா, குடு நான் அக்கா எடுத்துட்டு வர்ரேன். உனக்கு வேணும்கிறத அப்புரமா கேளு அக்கா தர்ரேன்} அப்படின்னு சொல்லி வாங்கிநாங்க. நானும் வரவேர்ப்பு முடிய காத்திருந்தேன். அப்புரம் {அக்கா எனக்கு பழம் குடுக்கான்னு கேட்டேன். அதுக்கு தனம் அக்கா ஆரஞ்சு பழச் சுளைல ரண்டு மட்டும் குடுத்துச்சிங்க. {ெங்க அக்கா நானு மூணு நாலு பழங்கள குடுத்தேன். ரண்டே பழந்தான் குடுக்கிரையே. நான் குடுத்த அப்போ பழம் பந்துமாதிரி குண்டாதானே இருந்துச்சி. இப்போ குட்டி குட்டியா வெரல் மாதிரி இருக்கு.} அப்படின்னு கேட்டேன். அதுக்கு அக்கா {அட மடப் பயலே, உனக்குத் தெரியலையா? ஆரஞ்சுப் பழத்த உரிச்சிதாண்டா தருவாங்க. மத்த சொளையெல்லாம் தோலோட தோலா போயிருச்சி} அப்படின்னு சொல்லுச்சிங்க.

அப்புரம் அட காலம் கடந்துதாங்க எனக்கே தெரிய வந்துச்சிங்க, தோலிருக்க சொள முழுங்கும் ஆளுங்கிறதுக்கான அர்த்தமும் அகராதிப் பொருளும். மத்தப் பழங்களையும் மிட்டாய்களையும் தானே பத்திரமா வச்சிருந்து அப்புரம் தர்ரேன்னு சொல்லிச்சிங்க அந்த அக்கா. அப்புரம் சாயங்காலம் கேட்டப்போ {என்னடா தம்பி பண்ணரது. எல்லாத்தையும் யாரோ திருடித் தின்னுட்டாங்கடா. அக்காவுக்குத் தந்ததுல இருந்து உனக்கு கொஞ்சம் தர்ரேன்னு சொல்லி ரண்டு ஆப்பிள் துண்டும் கொஞ்சம் மிட்டாய்களையும் அந்த அக்கா ஒரே அடியா நானு ேமாந்திடக் கூடாதுன்னு குடுத்துச்சி போல இருக்கு.

அந்த நாளில இருந்து அண்ணமார்களும் அக்காமார்களும் தனம் அக்காவுக்கு {தோலோட போச்சி தோலோட போச்சி} அப்படின்னு பட்ட பேர் வச்சிக் கூப்பிட ஆரம்பிச்சாங்க. யாராவது அக்காவோட சண்ட போடரப்போ {போடி தோலோட போச்சி} அப்படின்னு சொல்லிட்டா அப்போ அந்த அக்காவுக்குவரும் கோபத்த பாக்கணுமே. அக்கா நம்ம தாய் மொழி அகராதில இல்லாத புதுப் புது வார்த்தைகளை ஆயுதமாக்கி சண்டைக்கு வந்தவங்கமேல போர் தொடுக்கும். அக்காவோட சொல்லாயுதங்களுக்கு முன்னால பீமராசாவோட கதாயுதமும் ராமபிரானோட வில் வித்தையும் கூட தோத்து போயிடும்னா அப்புரம் பாத்துக்கோங்களேன். {அட அக்காவ அவமானப்படுத்த இதை சொல்லலிங்க. மெர்சியை நினைக்கிறப்போ இந்த சம்பவங்களும் என்னோட ஞாபகத்துக்கு தானே வந்திடுச்சிங்க.
மெர்சியை எங்களுக்கெல்லாம் புடிச்சாலும் தோட்டக்காரர் கதிரேசன் அண்ணநுக்கு மட்டும் புடிக்கவே இல்லயாமுங்க. அதுக்கு அவுரு சொன்ன காரணமும் ஏதோ ொரு வகையில ஞாயமாத்தான் இருந்ததுங்க. {மெர்சி நம்ம ஊருக்கு வந்த புதுஸுல நம்ம ஊரு பலகாரமான வடையைத்தான் விரும்பிச் சாப்பிட்டாங்களாம். தோட்டக் கார அண்ணந்தாங்க வாங்கி வந்து தருவாறாம். மசால்வடை உளுந்து வடைனு நெரைய சாப்பிட்டதால அந்த அம்மையாருக்கு கீழ் நாட்டு பிரச்சனை அதிகமா போயிடுச்சாம். அவங்க நாட்டு வழக்கப்படி கக்கூசுக்கு போயிட்டு கழுவாம டிஷ்யு பேப்பர வச்சி ஆசன வாயைத் தொடச்சித் தொடச்சி கக்கூசுக்குள்ளையே போட்டுப்புட்டாங்களாம். அப்புரம் கக்கூசு அடைச்சிக்க இவர கூப்பிட்டு காட்டிசுத்தம் பண்ணச் சொல்லுவாங்களாம். இவருதான் அறுவறுப்போட தொடச்ச காகிதங்களை அப்புரப்படுத்த வேண்டி இருக்குமாம். அதனால பாவம் கதிரேச அண்ணன் ரொம்பவே சங்கடப் பட்டாராம்.

எங்களப் பொருத்தவரை அவங்களமாதிரி ஒரு நல்ல ஆசிரியரையோ விளையாட்டுத் தோழியையோ அவங்க சொந்த நாட்டுக்கு போன பின்னால பார்க்க முடியலிங்க.
அவங்கதான் ஒரு புதுமையை பள்ளிக்கூடத்துல கொண்டு வந்தாங்க. குழந்தைகள் கிளி பிள்லை மாதிரி மனப்பாடம் பண்ணரத ஏத்துக்கலிங்க. அவங்க இருந்தவரை எங்களுக்கு வாத்தியாருங்க பரிட்சையே வைக்கலிங்க. வைக்கக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க போல இருந்துச்சிங்க. அந்த அளவோட மட்டும் இல்லைங்க. குழந்தைகள் செயல் வழி படிக்கிறதுக்கு வாத்தியார்களுக்கு சொல்லிக் குடுத்தாங்களாம். உழவு பத்தின பாடத்த வயலுக்கு கூட்டிப் போய் சொல்லிக் குடுக்கனும்அதுதான் குழந்தைங்க மனசுல படியும்} என்று சொல்லிக் குடுத்ததோட நேரடியா தானே குழந்தைகளுக்கான பாட புத்தகங்களையும் சரியான அட்கள வச்சித் தயார் பண்ணினாங்களாம்.

படிப்புங்கறது புத்தகத்துக்குள்ளமட்டும் இல்லங்கிறது அவங்க நெனைப்பு.

எங்களுக்கு கரும்பைப் பத்தி பாடம் வந்தப்போ கரும்புத் தோட்டத்துக்கே கூட்டிப்போய் காட்டினாங்க
கரும்பக் கொண்டு என்ன என்ன பொருள்கள் தயாரிப்பாங்க? அது எந்த ெந்த வடிவத்துல இருக்கும்?அவைகளோட பயன்கள் என்ந? போன்ற விவரங்களைத் தெரியவேண்டும் என்பதர்க்காக கரும்பாலைக்கு கூட்டிப் போய்க் காட்டினதோட கரும்பு பால் வெல்லம் எல்லாம் எப்படி தயாரிக்கிறாங்கண்ணு அங்க வேலை செய்யக்கூடியவங்க மூலமே எங்களுக்கு புரியரமாதிரி சொல்லவச்சாங்க. ஒரு நாளு பாலக்கோட்டுல உள்ள சக்கரை ஆலைக்கும் கூட்டிட்டு போய் காட்டினாங்க. மரத்தைப் பத்தி பாடம் வந்தப்போ ஒரு மரத்தை கூட்டிட்டு போய் காட்டினதோட, மரத்துல எப்படி பத்திரமா ஏரரது, இரங்கறது, மரத்தோட உறுப்புகள் எவை?அந்த மரத்தோட பேரு என்ந? அந்த மரத்தோட தனித்தன்மை என்ந?அந்த மரத்தை எப்படி படமா வரயரது? னு சொல்லிக் குடுத்தாங்க. ஆடை வகைகளைப் பத்திய பாடத்த புரிய வைக்க பருத்தி தோட்டத்துக்கு கூட்டிப்போய் காட்டினதுமட்டும் இல்லாம பருத்தி செடியோட பிம்பத்தையும் எப்படி பருத்தில இருந்து நூல் கிடைக்குது?எப்படி நூல துணியாக்கராங்க?என்பது போன்ற விவரங்களையும் நாங்களே புரிஞ்சிக்கிறமாதிரி கோட்டுச் சித்திரங்களை வரஞ்சிக் காட்டுவாங்க. பட்டு கம்பளம் முதலியவற்றைப் பத்தியும் இப்படியே அவங்களாலசொல்லித் தரப்பட்டதுங்க. அது மட்டுமில்லிங்க, குழந்தைங்கள எப்படி விளையாட வைக்கிறதுங்கிறதுக்கு கூட அவங்க கிட்ட ொரு திட்டம் இருந்ததுபோல. ஒரு குழந்தைகூட விளையாடாம இருக்க கூடாதுன்னு அவங்க முடிவு பண்ணிநாங்க. அவங்களும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டி வச்சாங்க. அவங்கள மாதிரி விளையாட்டுப் போட்டி வச்ச எந்த ஆசிரியரையோ விளையாட்டு நிருவனங்களையோ இதுவரை நானு கண்டதுமில்லை, கேட்டதுமில்லைங்க. இது விளையாட்டுக் கடவுள் மேல சத்தியமுங்க. விளையாட்டுக்குனு தனியா ஒரு கடவுள் இருக்கிறாரானு எனக்குத் தெரியாதுங்க. ஆனா நாம எல்லாத்துக்கும் கடவுள் வச்சிருக்கிறமாதிரி விளையாட்டுக்கும் ஒரு கடவுள வச்சிருந்்தா அந்த கடவுள் மெர்சியை அவங்களோட விளையாட்டு போட்டி முறைக்காகஎந்த பக்தனுக்கும் கொடுக்காத வரத்த ெல்லாம் கொடுக்கும்னு நான் உறுதியா நம்புறேங்க. மெர்சியைமாதிரி யாரும் ஒரு நாளும் விளையாட்டுப் போட்டி வச்சதில்லிங்க. . சாயங்காலத்துல விளையாடக் கூட்டிட்டு போவாங்க. குழந்தைகள் அவங்கள தீண்டும் விளையாட்டுல ஒரு ஊதியை வச்சி ஊதிட்டே போவாங்க. எந்த குழந்தை முதல்ல அவங்கள தொடுதோ அந்தக் குழந்தைக்கு முதல்ல ஊதியையோ அல்லது ஒரு பொம்மையையோ கொடுப்பாங்க. ஆனா பாருங்க. கடைசியா வரும் குழந்தைக்கு கூட முதல் குழந்தைக்கு தந்தமாதிரியே பரிசு தருவாங்க. எல்லாக் குழந்தைகளையும் சமமாவே நடத்துவாங்க. ஒரு குழந்தைமனசுலேயும் தாழ்வு மனப்பான்மை வரக்கூடாதுங்கிற கோணத்துலதான் அவங்களோட கற்பித்தல் முறையும் விளையாட்டு முறயும் இருந்ததா இப்போ அவங்களப் பத்தி நெனைக்கிறப்போ எனக்குத் தோணுதுங்க. மெர்சின்நா என்ன அர்த்தம்கிறதுக்கு அவங்களோட பேரில்லிங்க. அவங்களோட வாழ்க்கைதான் உதாரணமுங்க. கண்டிப்பும் கருணையும் அவங்களோட கூடவே பொறந்த குணம்னு சொல்லனுமுங்க. அப்படித்தான் ஒரு நாளு காத்தால {புள்ளைங்களுக்கு என்ன டிபன் போட்டிங்க}னு கேட்டிருக்காங்க. அதுக்கு எங்க ஹெட்மி்ஸ்ஸஸ் {சப்பாத்தி} னுசொல்லி இருக்காங்க. ஆனா அண்ணைக்கி ெங்களுக்கு ஹாஸ்ட்டல்ல போடப்பட்டது ரவைக் கூழுதாங்க. பசங்கள மெர்சி விசாரிச்சிருக்காங்க. அதுல பாருங்க ஒரு குரும்புக் கார அண்ணன் மெர்சிக்கிட்ட {அம்மா ணம்ம மேடம் என்ன டிபன்னு கேட்டா சப்பாத்தின்னு நீங்க சொல்லனும்} {யாரும் கூழுனு சொல்லக்கூடாது} னு அவங்க சொன்னதையும் போட்டுக் குடுத்திட்டாரு. அடுத்த நாளு மெர்சி காத்தால பிள்ளைங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கிரப்போவே வந்து எங்களுக்குத் தரப்படும் சாப்பாட்டுக்கான அட்டவணையை ஹெட்மிசஸ்கிட்ட காட்டி குழந்தைங்களோட சாப்பாட்டுவிஷயத்துல நீங்க மனசாட்சிக்கு விரோதமா நடக்க கூடாது, அவங்களோட பாவம் உங்களையும் உங்க குழந்தைகளையும் பாதிக்கும்} னு சொல்லிகண்டிச்சி இருக்காங்க. அதுக்கு அப்புரம் அவங்க இருந்த வரைக்கும் ஒரு நாளும் எங்க சாப்பாட்டுல கொறை இருந்ததில்லிங்க. ஆனா அவங்க சொந்த ஊருக்கு போன அப்புரம்?அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சமுங்க. மெர்சியைப் பத்திய ஞாபகங்கள எழுத ஆரம்பிச்சா அது பாஞ்சாலிக்கு கண்ணன் கொடுத்த சேலைமாதிரி வளர்ந்துக்கிட்டே போகுமுங்க. உங்களுக்கும் படிக்கிற பொரும இருக்காதுங்க. எப்படி மெர்சி எங்க ஸ்கூலுக்கு வந்த நாள் எங்களுக்கு கொண்டாட்டமா இருந்திச்சோ அட அதே மாதிரி அவங்க எங்கள விட்டு தன்னோட தாய் நாட்டுக்கு புரப்பட்ட நாளும் கொண்டாட்டந்தாங்க. ஆனா அந்தக் கொண்டாட்டம் எப்படி ஒரு பொண்ணோட கல்யாணம் பெத்தவங்களுக்கு சந்தோஷமும் சங்கடமுமா இருக்குமோ அப்படித்தாங்க இருந்துச்சி. மெர்சியோட பிரிவு உபச்சார நாளு தென்னாளிராமன் கதைல நாம படிச்சி இருப்போமில்லிங்களா அதுதாங்க பலகார மழ கதை. நெஜமாவே மெர்சி எங்கள விட்டுப் பிரிஞ்சி போன அந்த நாள இனிப்பும் காரமுமா பலகார மழை நாளா ஆக்கிட்டுதான் போனாங்க. அவங்கள கடைசியா நானும் என்கூட டான்சு ஆடின நண்பர்களும் {உங்களோட பழகின காலம் சந்தோஷமா இருந்துச்சி உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் அருளுவாரு}னு எங்களுக்கு பாட்டு வாத்தியாரு கத்துக் குடுத்த பாட்டோட வரிய சொல்லி கடைசியா வாழ்த்துப் பாடி அனுப்பினோம். அந்த பாட்டோட அர்த்தம்அட அப்போ புரியலிங்க. எனக்கு அவங்களப் பத்திய ஞாபகங்கள எழுதுர இண்ணைக்குதாங்க புரியுது.
புகைப்படம்: குழல்வேந்தன் படைப்பு

மெர்சியின் ஞாபகங்கள்

சனி, 16 நவம்பர், 2013

நிபந்தனைகளுக்குட்பட்டது - சிறுகதை: கி.ச.திலீபன்

           ஹரிஹரன் வடபழநி பஸ் ஸ்டாப்பில் இறங்கி நின்ற போது சூரியன் உச்சியில் நின்று கொண்டிருந்தது. சென்னையின் வெப்பத் தகிப்பில் நிழலுக்கு ஒதுங்கியபடி பலர் காணப்பட்டனர். போக்குவரத்து நெரிசல் மிக்க வடபழநி சிக்னல் தன் தனித்துவத்தை இழந்து வெறுமனே காணப்பட்டது. 27சி பஸ் பிடித்து மதுரவாயலிலிருந்து வடபழநி வந்தாயிற்று இருந்தும் ஹரிஹரனுக்கு எந்த யோசனையும் மட்டுப்படவில்லை. அடுத்த அடியை எங்கு வைப்பது என்பதில் கூட குழம்பியபடி நின்று கொண்டிருந்தான். பஸ் ஸ்டாப்புக்கு எதிரே உள்ள மரத்தடியில் வார, நாளிதழ்களின் போஸ்டர்கள் சகிதமாய் ஒரு சிறிய கடை தெரியவே அங்கு சென்றவன் கோல்டு ஃபில்டர் ஒன்றை வாங்கி பத்த வைத்தான். மீதி சில்லறையை நீட்டிய கடைக்காரரிடம் “அண்ணா... இங்க எங்கயாவது வாடகைக்கு வீடு கிடைக்குமா?” என மெல்லிய குரலில் கேட்டான்.
“பேச்சிலரா”
“ம்ம்” என்றபடி தலையசைத்தான்.
“முருகன் கோவில் தெப்பக்குளத்துக்கு பின்னாடி ரெண்டு மேன்சன் இருக்கும் போய்ப்பாரு”என்று சொல்லி விட்டு மீண்டும் தன்  வியாபாரத்தில் மும்மரமானார் அந்த கடைக்காரர்.
மேன்சன் வாழ்க்கையைப் பற்றி ஹரிஹரன் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறான். முகம் தெரியாத இரண்டு பேருடன் ஒரே அறையில் தங்க வேண்டும். மேன்சனுக்கே பொதுவாக உள்ள கழிப்பிடத்தில் வரிசையில் நின்று செல்ல வேண்டும். நாம் எதிர்பார்க்கிற சூழலை அங்கு அமைத்துக் கொள்ள முடியாது போன்றவற்றை கேட்டதிலிருந்து ஹரிஹரனுக்கு மேன்சன் மீது பெரிய அபிப்ராயம் இல்லை.
 வடபழநி முருகன் கோவிலைக் கடந்து தெப்பக்குளத்தின் அருகே உள்ள வீதியில் நடையிட்டான். கொளுத்தும் வெயிலைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக்கொள்ள இப்போது ஹரிஹரனுக்கு நேரமில்லை அவனுடைய ஒரே இலக்கு வாடகைக்கு வீடு பிடித்தாக வேண்டும் அதுவும் இன்றைக்கே. Tolet என்ற ஆங்கில வார்த்தைகளை தாங்கிய போர்டை தேடி அவனது கண்கள் பரபரத்தன.
“நீ சினிமா டைரக்டர் ஆகி கிழிச்சதெல்லாம் போதும் ஊர் ஒலகத்துல எவனுமே இல்லையா படம் எடுக்க... நீ எடுத்தாத்தான் படம் பாப்பேன்னு இங்க எவனும் சொல்லல... இனி இந்த எழவு புத்தகம் வாங்குறது, டிவிடி தட்டு வாங்குறதையெல்லாம் உட்டுப்போட்டு நம்ம கடையை பொறுப்பா கவனி... இல்லையா நீ படிச்ச சிவில் இஞ்சினியர் படிப்புக்கு பக்கத்துல எங்கியாச்சும் வேலை வாங்கித் தர்றேன் ரெண்டுல் ஏதாச்சும் ஒன்னச் செய்யு மறுபடியும் சினிமாவுக்குத்தான் போவேன்னு குதிக்காத” ஹரிஹரனின் தந்தைக்கும் இவனுக்கும் வெடித்த மோதலில் எல்லாவற்றுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நாமக்கல்லில் இருந்து சென்னை புறப்பட்டு வந்து விட்டான். சென்னை வந்ததும் மதுரவாயலில் இருக்கும் இம்மானுவேல் அண்ணன் அறைக்குள் தஞ்சம் புகுந்து விட்டு இன்றோடு இருபது நாட்கள் ஆகிற்று.
வாரக்கணக்கில் வடபழநி, சாலிகிராம வீதிகளில் சுற்றியலைந்தான். இவனத்தான் காணவில்லை என எந்த இயக்குநரும் உதவி இயக்குனர் வாய்ப்போடு இவனுக்காக காத்திருக்கவில்லை. திரைத்துறையை பொறுத்த மட்டிலும் பொறுமை என்பது மிகத்தேவையான ஒன்று அது ஹரிஹரனுக்கு நன்கு தெரியும். ஆனால் பசி கொண்ட இந்த சென்னை மாநகரில் தன் வாழ்க்கை வண்டியை ஓட்டித் தீர வேண்டும் என்றால் பணம் முக்கியம். அப்பாவிடம் கேட்டானென்றால் எக்கேடோ கெட்டு ஒழி என்று பெற்ற பாசத்தில் பணத்தை அனுப்பி விடுவார் ஆனால் தான் மானஸ்தன் என்கிற நினைப்பு மட்டும் இவனுக்குள் குத்திக் குடைவதால் அந்த வழியைத் தவிர்த்து விட்டான். சிவில் இஞ்சினியரிங் முடித்த சர்டிஃபிகெட்களுடன் சுற்றியலைந்ததில் கே.கே.நகரில் உள்ள ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷனில் மாதம் பன்னிரெண்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.
ஒரு வார காலமாக மதுரவாயலில் இருந்து கே.கே.நகர் சென்று வந்து கொண்டிருந்தான். வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே ஏதாவது அறை எடுத்து தங்கினால் அலைச்சல் மிச்சம் என இம்மானுவேல் அண்ணன் சொன்னார். இவனும் பார்ப்போம் பார்ப்போம் என தட்டிக் கழித்து வந்தான். இப்படியிருக்கையில் இன்று காலை நிகழ்ந்த சம்பவம்தான் ஹரிஹரனை வடபழநியின் வீதிகளில் சுற்ற விட்டிருக்கிறது.
காலையில் அப்போதுதான் கண் விழித்தான்
“நானும் பாத்துக்கிட்டிருக்கேன் நீ ரொம்ப ஓவராத்தான் போய்க்கிட்டிருக்க... வர்றது வந்து ஜன்னலைத் தொறந்து பாக்குறது... வீட்டுக்குள்ள வந்து சுத்திப் பார்க்குறது... என்னவோ மைசூர் மகாராஜா பேலஸைக் கட்டி வாடகைக்கு விட்டிருக்குற நாங்க அதுல அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டிருக்கமா... மழை வந்தா ஒரு மூளையில ஒழுகிக்கிட்டிருக்கு இந்த லட்சணத்துல நீ மாசமான வாடகை கரெக்டா வந்துடனும்னு குதிக்குற... காடு வா வாங்குது வீடு போ போங்குது கட்டையில போற வயசுல கெழட்டு நாய உனக்கென்னடா ஆசை வந்து அவுக்குது... மொற வாசக்கூலி மயிரு வாசக்கூலின்னு வாடகையை விட ஐநூறு ரூபா கூட வாங்குறியில்ல நான் ஏதாச்சும் சொன்னனா... இவன் வந்து பத்து நாள் தங்கியிருந்ததுக்கு ஆயிரம் எச்சா குடுங்குற இதென்ன உங்கொப்பனூட்டு காசுன்னு நினைச்சிட்டியா...”
இம்மானுவேல் அண்ணன் வீட்டு உரிமையாளரான முதியவரிடம் காட்டுக் கத்தல் கத்திக்கொண்டிருந்தார்.
“இத பாரு... மரியாதையா பேசு வீடு எடுக்கும்போது நாலு பேருக்கு மேல தங்கக்கூடாதுன்னு சொன்னனல்ல அப்புறம் என்ன போய் இன்னொருத்தனை சேர்த்துக்கிட்டு...”
“ஏய் உனக்கெல்லாம் இனி மேட்டுக்கு மரியாதை தர முடியாது. அவனை காலி பண்ணச் சொல்லிடறேன்... ஆயிரம் ரூபாயெல்லாம் கொடுக்க முடியாது நீ எடத்த காலி பண்ணு வீட்டை வாடகைக்கு விட்டுட்டியல்ல இனி நீ உள்ள கால் எடுத்து வைக்கக் கூடாது”
“நீ காலி பண்றா வீட்டை விட்டு”
“காலங்காத்தால கடுப்பைக் கெளப்பீட்டு கிளம்புடா”
“நீ கெளம்புடா”
“அப்ப அட்வான்ஸைத் திருப்பிக்குட்றா” என்று கனத்த குரலில் இம்மானுவேல் கேட்க வீட்டு உரிமையாளர் எந்த பதிலும் இல்லாமல் வீட்டை விட்டு அமைதியாக வெளியேறினார்.
இதற்கு மேல் இங்கு சமாளிக்க முடியாது எனவும் எப்படியேனும் வடபழநியில் ஒரு வாடகை வீடு எடுத்துக் கொள்ளும்படியும் வேறு வழியில்லாமல் இம்மானுவேல் சொன்னதை அடுத்துதான் ஹரிஹரன் வீடு தேடும் படலத்தை துவக்கியுள்ளான்.
தெப்பக்குளத்தை அடுத்துள்ள வீதியில் பழமையான ஒரு மாடி வீட்டின் கீழ் tolet என்று எழுதப்பட்டிருக்க அந்த வீட்டின் உள் நுழைந்தான். அங்கு துணி துவைத்துக்கொண்டிருந்த பெண்மணி இவன் வருகையை கண்டதும் கையை கழுவிக் கொண்டு எழுந்தாள்.  இவனிடம் விவரத்தை கேட்டவுடன் பின்னாலே வரும்படி கூறி நடந்து சென்றவள் “இதான் ரூம் நீங்க ஒருத்தார்தானே அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்” என்றதும் ஹரிஹரன் மெல்ல அறையை உற்று நோக்கினான். சிமெண்ட் பூசப்படமால் செங்கல் பிணைப்போடு காட்சி தரும் சுவர். என்றைக்கு இடிந்து விழும் என்று தெரியாத மேல் பகுதியில் சிமெண்ட் சுவர் பெயர்ந்து விழுந்து கட்டுக்கம்பிகள் துறுப்பேறிய நிலையில் காணப்பட்டன. சுவற்றில் ஆங்காங்கே விரிசல்கள். சொரசொரப்பான தரை என ஒன்றுக்கும் உதவாத கட்டிடத்தை கூட யாராவது இளிச்சவாயன் தலையில் கட்டி விடத் துடிக்கும் அந்தப் பெண் “ரெண்டாயிரம் ரூபாய் வாடகை... ரெண்டு மாச வாடகை அட்வான்ஸ்” என்று சொல்லி விட்டு இவனை ஏறப்பார்த்தாள். “இன்னுமாடி பெண்ணே நான் வீடு எடுப்பேன் என நம்பிக்கொண்டிருக்கிறாய்” என்கிற தொணியில் பார்த்து விட்டு மௌனத்தை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு ஹரிஹரன் வாசல் நோக்கி நடந்தான்.
தெரு முனையில் ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தது. இந்த சென்னையைப் பொறுத்தவரைக்கும் கூகிள் மேப்பாக செயல்படுபவர்கள் ஆட்டோக்காரர்கள்தான். எத்தனையோ பேருக்கு வழி சொல்லும் ஆட்டோக்காரர் இவனது பிரச்சனைக்கு ஒரு வழி சொல்ல மாட்டாரா என்கிற நம்பிக்கையில் ஸ்டேண்டை நோக்கி நடந்தான். பலான ஜோக் ஒன்றைச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்களில் ஒருவர் “என்னாப்பா எங்க போவணும்” என்று இவனை பார்த்து குரல் கொடுத்தார்.
“இந்த ஏரியாவுல வீடு எதனா வாடகைக்கு” என்று இழுத்தான்.
“பேச்சிலரா” எத்தனை பேர்தான் இதே கேள்வியை கேட்பார்கள் என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு ஆமாம் என்பது போல தலையசைத்தான்.
“அட்டாச்சுடு பாத்ரூமோட மூவாயிரம் ரூபாய் வாடைகைக்குள்ள ஒரு வீடு இருக்கு” என்றவரை ஆவலாய் பார்த்தான்.
 “முந்நூறு ரூபா குடு வழி சொல்றேன்” என்று சொல்லவும் இவனது முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. எதுவும் பேசாமல் அங்கிருந்து நடந்தவனிடம். “தம்பீ இங்கெல்லாம் காசில்லைன்னா வேலையாவாது” என்று ஆட்டோ ஓட்டுநர் உரக்க சொன்னார்.
கங்கை அம்மன் கோவில் தெரு...
“பேச்சுலருக்கெல்லாம் வீடு கொடுக்கிறதில்லை”
“சார் எனக்கு தண்ணி தம்முன்னு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருப்பேன்”
“வீடு எடுக்கும்போது இப்படித்தாய்யா சொல்லுவீங்க அப்புறம் நீங்க அடிக்கிற கூத்து எங்களுக்குத் தெரியாது பாரு நாங்க என்ன இன்னைக்கு நேத்தா சென்னையில குடியிருக்கோம்”
சிவன் கோவில் தெரு...
 “வாடகை நாலாயிரம் ரூபாய் அட்வான்ஸ் நாற்பதாயிரம் ரூபாய்”
“எங்கிட்ட அட்வான்ஸ் வாங்கித்தான் வீடே கட்டப்போறீங்களா”
“என்னது”
“பத்து மாச வாடகையை அட்வான்ஸா கேக்குறீங்களே”
“எல்லாப்பக்கமும் அப்படித்தான் இஷ்டமிருந்தா வா இல்லைன்னா உன் விருப்பம்”
வடபழநி பேருந்து நிலையம் பின்புறம்..
tolet போர்டுக்கு கீழ் எழுதப்பட்டிருந்த எண்ணுக்கு டயல் செய்தான்
“ஹலோ”
“சார் என் பேரு ஹரிஹரன்.. டூலெட் போர்டு பார்த்தேன் வீடு வாடகைக்கு வேணும் வாடகை எத்தனை ரூபாய் சார்”
“காமன் பாத்ரூம்... நாலாயிரத்தைநூறு ரூபாய் வாடகை சார் நாலு மாச வாடகை அட்வான்ஸ்”
“சார் ஒரு ஐநூறு குறைச்சுக்க முடியுமா?”
----------- எதிர் முனையில் லைன் கட் ஆனது.
மணி மூன்றைத் தாண்டிற்று பசியில் வயிறு வேறு உள்ளிருந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. ஹரிஹரனுக்கு பசியெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. கங்கை அம்மன் கோவிலில் தொடங்கிய தேடுதல் கிளைகிளையாகப் பிரிந்து இப்போது சாலி கிராமத்தில் வந்து நின்றாயிற்று வீடுதான் கிடைத்தபாடில்லை. வீடு வேண்டும் என்பதற்காக திருமணமா செய்து கொள்ள முடியும் என்று ஹரிஹரன் உள்ளூர நினைத்து சிரித்துக் கொண்டான். அருகில் இருந்த பெட்டிக்கடையில் சிகரெட் ஒன்றை வாங்கி பற்ற வைத்தான். இழுக்கிற ஒவ்வொரு இழுப்பிலும் புகை நெஞ்சுக்கூட்டை வருடி விட்டு மேலெழும்புவது போன்றதொரு உணர்வு.
எதிரே உள்ள சுவரில் டூலெட் என்று அதன் கீழ் தொடர்பு எண்  அச்சிடப்பட்டிருந்த துண்டுச்சுவரொட்டிகள் ஏகமும் ஒட்டப்பட்டிருந்தன. ஹரிஹரனுக்குள் இனியும் தன்னால் வீடு தேடி குடியேற முடியும் என்கிற நம்பிக்கை அற்றுப் போனது. சுவரொட்டியில் இருந்த எண்ணை டயல் செய்தான்.
“வணக்கம் ஹரிஹரன் என் பேரு. வடபழநி, கே.கே. நகர் ஏரியாவுல வாடகைக்கு வீடு வேணும்”
“பேச்சிலரா?” இந்த கேள்வி ஹரிஹரனை கடுப்பாக்கியது “ம்ம்” என்றான்.
“என்ன ரேஞ்சுல வேணும்”
“மூவாயிரத்தைநூறு டூ நாலாயிரம்”
“நீங்க எங்க ஆஃபீஸ் வந்தீங்கன்னா டீடெய்லா பேசலாம்”
“வர்றேன் சார் உங்களுக்கு கமிஷன் எத்தனை சார் கொடுக்கணும்?”
“ஒரு மாசத்து வாடகை” என்று சொல்லவும் ஹரிஹரனால் மேற்கொண்டு பேச முடியவில்லை போனை கட் செய்யாமல் அப்படியே பாக்கெட்டில் சொறுகினான்.
“என்ன தம்பி வாடகைக்கு வீடா” என பெட்டிக்கடைகாரர் கேட்கவும் திரும்பியவன் தலையசைத்தான்.
“ஒரு மாசத்து வாடகையை கமிஷனா கேட்டிருப்பாங்களே... அதிகமாத்தான் இருக்கும் வேற வழியே இல்லை கொடுத்துத் தொலைச்சுட வேண்டியதுதான் ஏன் சொல்றேன்னா இவங்க இல்லாம இங்க  வீடு பிடிக்கிறது சிரமம். இவங்க நிறைய வீடுகளை கண்ட்ரோல்ல வெச்சிருக்காங்க அப்படிப்பட்ட வீடுகள்ல டூலெட் போர்டு மாட்டக்கூடாதுன்னு சொல்லிடுவாங்க மாட்டினாத்தான நீ போய் கேட்க முடியும். சந்து சந்தா சுத்தி அலையுறதுக்கு பதிலா கோவில் உண்டியல்ல போடுறதா நெனைச்சு கொடுத்திடு” என்றார். இந்தக் கடைக்காரருக்கு ஒரு வேளை கமிஷன் வருகிறதோ அந்த ஏஜெண்டை இந்த அளவுக்கு சிபாரிசு செய்து பேசிக் கொண்டிருக்கிறார் என்றே ஹரிஹரனுக்கு பட்டது.
ஒரு மாத வாடகையை தரகுக்கூலியாய் தாரை வார்ப்பதில் ஹரிஹரனுக்கு உடன்பாடில்லை. இன்னொன்று தரகர்கள் இல்லாமல் வீடே எடுக்க முடியாது என்று சொல்லும் கூற்றினை உடைத்து ஒரு வீடு பிடித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் ஹரிஹரனை உந்தித் தள்ளியது. ஹரிஹரனுக்கு இப்போதுதான் ஒரு உண்மை புலப்பட்டது. இந்த சென்னையில் வீடு வாடகைக்கு எடுப்பதற்கு இரண்டே வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று பணம் இன்னொன்று விடாமுயற்சி. பணத்தைக் கொடுத்து வீடு பிடிக்க இவனொன்றும் அம்பானியின் அத்தை மகன் அல்லவே. எனவே விடாமுயற்சியுடன் தேட முற்பட்டான்.
வாடகை அதிகம், அட்வான்ஸ் அதிகம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வீடு கொடுப்பதில்லை, பேச்சிலர் என பல்வேறு காரணப் பின்னல்களில் சாலிகிராமத்தின் தெருக்களில் சுற்றியலையும் ஹரிஹரனுக்கு வீடு ஒத்துவரவில்லை. ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்தல் என்பது அலுப்பூட்டக்கூடியது ஹரிஹரனின் நிலையும் அதுதான். பேசாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு தரகர்களிடம் சரணடைந்து விடுவோமா? என்கிற சிந்தனையும் வந்தது. தோற்று விட்டோம் என ஏற்க மனமில்லாமல் அடுத்த வீட்டை நோக்கி நடந்தான்.
ஹரிஹரன் அந்த வீட்டின் கதவைத் திறந்த போது அலிபாபா கதையில் வரக்கூடிய குகையைத் திறந்தது போன்றதொரு உணர்வு. இந்த பகல் வேளையிலும் கூட இந்த வீட்டிற்கு மட்டும் அமாவாசையாக இருந்தது. செல்போன் டார்ச் உதவியுடன் சுவிட்சைத் தட்ட சி.எஃப்.எல் பல்ப் எரிந்தது. சிறிய அறையில் குறுக்காக சுவர் எழுப்பி அந்தப்புறம் சமையலறையை பிரித்திருந்தனர். தண்ணீர் இணைப்பு இல்லை கழிப்பறை உபயோகத்திற்கு கிணற்றில் இருந்து நீர் சேந்த வேண்டும். குடிக்க மாலையில் வரும் மெட்ரோ குடிநீரைத்தான் குடிக்க வேண்டும். ஹரிஹரனுக்கு இந்த வீட்டின் மீது பெரிய உடன்பாடு இல்லைதான் இருந்தும் இனியும் வீடு தேட உடலில் வலுவில்லை எனவும் முடிந்த மட்டிலும் இதையே பேசி முடிக்கலாம் எனவும் முடிவெடுத்தான்.
“2800 ரூபா வாடகை எங்களுக்கு அட்வான்ஸெல்லாம் அதிகம் வேண்டாம் பத்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தா போதும்” வீட்டு உரிமையாளாரான பாட்டி இவனிடம் வாடகை விவரங்களைக் கூறினாள்.
ஹரிஹரனின் எதிர்பார்ப்புகளை இந்த வீடு பூர்த்தி செய்யாவிட்டாலும் இவனது பொருளாதார சூழலுக்கு ஏற்ற வீடாக இருந்தது. அதுவும் தரகர் தயவு இல்லாமலேயே வீடு பிடித்து விட்டதோர் வெற்றிக் களிப்பு அவன் முகத்தில் தென்பட்டது.
“ஆனா ஒரு கண்டிசன்பா”
“கண்டிசனா?” என புருவம் உயர்த்தி பாட்டியையே பார்த்தான்.
“அஞ்சாம் தேதிக்குள்ளார வாடகையைக் கொடுத்திரனும், ரூம்ல தண்ணி அடிக்கக்கூடாது, வெளியிருந்தெல்லாம் பசங்களைக் கூட்டிட்டு வரக்கூடாது, ரூமை டெய்லியும் கூட்டி சுத்தமா வெச்சுக்கணும், ஒட்டடை தேங்கிறதுக்கு வுடக்கூடாது அடிச்சுக்கூட்டிரணும், சாயந்திரத்துக்கு மேலயெல்லாம் துவைக்கக்கூடாது, அடிச்சுத் துவைக்கக்கூடாது சத்தம் வரும் அதனால கும்மிக்க வேண்டியதுதான் அப்புறம் ரூம்ல ஆணி அடிக்கக்கூடாது ஏற்கனவே அடிச்சு வெச்சிருக்கு, ஆறு மாசத்துக்குள்ள காலி பண்ணீங்கன்னா அட்வான்ஸை திருப்பித் தரமாட்டோம் முக்கியமான விஷயம் காலி பண்றதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே சொல்லிடணும்” என்று விதிமுறைகளை மளமளவென பாட்டி ஒப்புவித்ததும் எவ்வித சலனமுமற்று நின்று கொண்டிருந்தான்.
“திங்கட்கிழமை அட்வான்ஸ் கொடுத்துட்டு குடி வந்துக்குறேன் பாட்டி” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான். வீடு வாடகைக்குக் கிடைத்து விட்ட மகிழ்ச்சியெல்லாம் நொடியில் பறந்தது. எதையெல்லாம் இவன் சுதந்திரம் என நினைத்தானோ அதையெல்லாம் நிபந்தனை என்கிற பெயரில் முடக்கி விட்டது போலவே எண்ணினான். தெருமுனையில் இருந்த கடையில் அதே கோல்ட் ஃபில்டரை வாங்கி பற்ற வைத்தான். இம்மானுவேல் அண்ணனுக்கு டயல் செய்தான்...
“வீடு கிடைச்சுதா என்ன”
“கெடைச்சுது... கெடைச்சுது..”
“ஏன் டல்லா பேசுற... ஓ... கண்டிசன்ஸ் அப்ளைடா” என்று சொல்லி சிரிக்க
“கடுப்பேத்தாதண்ணா... இந்த வீட்டை பிடிக்க நான் பட்ட பாடு எனக்குத்தான தெரியும்... என்ன இருந்தாலும் ஒரு வழியா பிரச்சனை முடிஞ்சுதே...”
“என்னது பிரச்சனை முடிஞ்சுதா? இப்பத்தான் தம்பி பிரச்சனையே ஆரம்பிச்சிருக்கு... வீடு வாடகைக்குதான் எடுத்திருக்க இனி மேல்தான் விஷயமே... போக போக புரிஞ்சுக்குவ எப்படியோ வாழ்த்துக்கள்” என்றபடி போனை கட் செய்தார்.
இம்மானுவேல் அண்ணன் சொன்னதும் ஒரு விதத்தில் சரியாகப் பட்டது. வீடு வாடகைக்குத்தானே எடுத்திருக்கிறோம் அதற்குள் அலுத்துக் கொண்டால் எப்படி இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியிருக்கிறது என உள் மனம் சொன்னது. இவன் சிகரெட்டை கீழே போட்டு அணைத்து விட்டு வடபழநி பேருந்து நிலையம் நோக்கி நடந்தான்.....  

வியாழன், 14 நவம்பர், 2013

தனிமையின் இசை- கே.ஆர்.பி. செந்தில்

ரம்ஜான் மாத மழைக்கால இரவொன்றில் நான் தனித்திருக்கிறேன். மின்சாரம் அடர் மழை காரனமாக நிறுத்தப்பட்டு ஒற்றை மெழுகுவர்த்தி காற்றில் போராடியபடி என்னை ஒரு பேரிருளில் இருந்து இன்னும் சற்று நேரம் தள்ளி வைக்க முயன்றுகொண்டிருந்தது. தனிமை எனக்கு மிகவும் பழக்கமானதும், பிடித்தமானதும் கூட. எப்போதெல்லாம் தனிமை கிட்டுகிறதோ!, அப்போதெல்லாம் என் சுயம் காப்பாற்றப்படுவதை உணர்ந்திருப்பதால், கிடைத்த சொற்ப தனிமைகளை கொண்டாடுபவன் நான்.

வெளியே பெய்யும் மழைக்கு ஒதுங்கிய அல்லது வழிதவறிய தவளையொன்று எப்படியோ வீட்டிற்குள் நுழைந்து மொழி புரியாத ஒரு பாடலை அவ்வபோது பாடிக்கொண்டிருந்தது. இதே போல ஒரு ரம்ஜான் மழைநாளில்தான் நான் உன்னை சந்தித்தேன். அது ஒரு முற்பகல் நேரம். அறையில் தனித்திருந்த நான் சமைக்க அலுப்பாகி, கடைத்தெருவுக்கு ஏதாவது உணவு வாங்கிப்போகலாம் என கனுக்கால் நீரில் செறுப்பில்லாத கால்களால் சளப்.. சளப் என ஒரு தாள கதியுடன் நடந்துசென்றேன். மனது சில சோகப்பாடல்களை அத்தாளகதிக்கு தயார் படுத்தி என்னை மழையுடானான உறவில் இருந்து பிரிக்க முயன்றபோது, சடாரேன வீசிய ஒரு காற்று என் முன்னே ஒரு குடையை வேகமாக இழுத்துச்செல்ல பின்னால் அவசரமாக ஒரு குரல் “பிடிங்க..பிடிங்க” எனப்பதறவே குடையை பிடிக்கும் உத்வேகத்தை அக்குரல் என்னை உத்தரவிட்ட வசீகரத்தை ரசித்தபடி ஓடி அக்குடையை அடைந்த கணத்தில்தான் நான் உன்னை பார்த்தேன். ஒரு கணம் பிரபஞ்சம் நின்று சுழன்றது மாதிரி இருந்தது.

ஒரு அசாதரமான புன்னகையால் எனக்கு நன்றி சொன்னாய். பராவாயில்லை என சொல்லியபடி உன் புன்னகையின் ஆகர்சத்தில் நான் மூழ்கியபோது, “நீங்களும் குடைக்குள் வாங்க” என என் அனுமதிக்கு காத்திராமல் எனக்கும் குடை பிடித்தாய். நாம் இருவருமே ஒரு பாதி நனைந்தோம். எதற்காக நான் சாலைக்கு வந்தேன் என்பதே மறந்துவிட்டது எனக்கு. அதன்பின் சந்திப்புகள்… சந்திப்புகள்… சந்திப்புகள். வாழ்வின் வசந்த காலங்கள் அவை. அப்போதும் சரி, இப்போதும் கூட ஏன் என் காதலை உன்னிடம் சொல்லமுடியவில்லை? என்பதற்கான விடையே கிடையாது. உன்னை சந்திக்கிறேன், பேசுகிறேன் என்பதே என் வாழ்நாளுக்கு போதுமானதாக நான் நினைத்திருக்கலாம்.
உன் வேலை மாறுதல் கடிதம் வந்த மறு வாரம் ஒரு அவசர அவகாசத்தில் ரயில் நிலையத்தில் நீ என்னை கடைசியாக பார்த்தபோது உன் கண்கள் மிகுதியாக அழுது களைத்திருந்தன. மிகுந்த சிரமத்துடன் நீ என் கைகளை பிடித்தபடி ஊருக்குப்போனதும் கடிதம் எழுதுகிறேன் என்று ஒரு சிறிய புன்னகையால் என்னை சமாதானம் செய்வது போல கெஞ்சினாய், நாம் விடை பெற்றோம். அந்த இரவுதான் நான் வாழ்வில் சந்தித்த நீண்ட, கொடுமையான இரவு. அதன்பிறகு ஏராளமான இரவுகள். தனிமை இரவுகள். ஆறு மாதம் கழித்து உன் திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தாய் அத்துடன் ஒரு சிறிய கடிதம் திருமணத்திற்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. கலைந்திருந்த எழுத்துக்கள் உன் கண்ணீரால் கழுவப்பட்டிருக்க வேண்டும். எப்போதும் வேண்டுகோளை மதிப்பவன் நான்.

இத்தனை வருடங்களாக உன்னை நான் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதை நான் விரும்பவும் இல்லை. மெல்ல மெல்ல இத்தனிமை எனக்கு பழகிவிட்டது. இன்று மழையால் அலுவலகம் செல்லவில்லை. காலை, மதியம் என இருவேளை சாப்பிடாதது பசியின் தக்கத்தை அதிகப்படுத்திருந்ததால், கடைத்தெருவுக்கு மாலையில் சென்றிருந்தேன். எப்போது மழை பெய்தாலும் குடை தேவைப்படாத ஆள் நான். மழை என்றால் நனைவதே விருப்பம். வெளியே மழை சாரலாக இறங்கிக்கொண்டிருதது. நாயர் கடையில் கட்டன் சாயா அடித்துவிட்டு எங்காவது சூடாக இட்லி சாப்பிடலாம் என மனம் கணக்கிட நாயர் கடையில் சாயாவை ருசித்தபடி மழையை ரசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கணம் பிரபஞ்சம் நின்று சுழன்றது. ஆம், நீ தெருவில் நடந்து வந்தாய்!. கூடவே உன் கணவனும், பிள்ளையும் என நினைக்கிறேன், சாரலில் குடைக்கு வெளியே நடந்து வரும் உன்னை கேலி பேசியபடி வருகிறார்கள். உன்னுடன் பேச வேண்டும் எனும் பெருவிருப்பத்தை மனதிற்குள்ளாக புதைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன்.

மெழுகுவர்த்தி தன் உயிரை விட்டுவிட்டது, பேரிருள் என் தனிமையை சொந்தமாக்கி கொண்டது. வெளியே மழை அசுர வேகத்தில் இந்த நகரை மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது. வழிதவறிய ஒற்றைத்தவளை இந்த அறையில் என் தனிமையை பாடிக்கொண்டிருக்கிறது.

கே.ஆர்.பி. செந்தில்

வியாழன், 3 அக்டோபர், 2013

ஊமச்சிபோசி

ஊமச்சி போசி
rajan
பேரென்னவோ வெசாழக்கிழமைச் சந்தைதான். அவளுக்கோ வருசம்       முன்னூத்தி அறுவத்தஞ்சு நாளும் வியாபாரம் உண்டு. சந்தை மேட்டுக்கு பொறவால ஏரி. தண்ணீரெல்லாம் வத்தி வருசக்கணக்காச்சு. ஆக இப்போது ஏரிப்பள்ளம். சந்தைத் திடல் முடிந்து ஏரிக்கு நடக்கும் ஒத்தயடிப்பாதை தொடங்குமிடத்தில் சாலை போட்டு வேலை நடந்தது அவளுக்கு.

உள்ளூர் குடியானவ வலுசல்களுக்கு ஓசிச்சோறு என்றால் ஒரு கிறக்கம். அந்தச் சந்தையில் ஆண்களுக்கு ஆசையான பண்டம் அவள். தொட்டு மை வைத்துக்கொள்ளலாம். அப்படி யொரு மின்னும் கருப்பு. அரை மப்பென்பது போல் மயங்கி நிற்கும் கண் ரெண்டும் . உடம்பு வாகுக்குப் பொருந்தாமல் குத்திட்டு நிற்கும் கனத்த முலைகளை பக்கவாட்டிலிருந்து பார்த்தாலே போதுமாம்.

எல்லாவற்றையும் விட,  படுத்து எழுந்தால் காசு கொடுக்கத்தேவையில்லை. என்னவும் செய்யலாம், இழுத்த இழுப்புக்கு வருவாள். வெறி தீரச் சுமை இறக்க அந்த சுத்து வட்டாரத்தில் இது போல் இளிச்சவாய்த் தொடுசு அகப்படாது. சமயத்தில் சேக்காளிகள் சேர்ந்து இருவர் மூவரெனப் புணர்ந்து ரணமாக்கிவிடுவர். அப்போதும் கூட மயங்காத்தாளிடமும் செருப்படி வாங்கிக்கொள்வாளே ஒழிய யாரையும் நொந்து கொள்வதில்லை. முயங்க முயங்கவே கழட்டி வைத்த டவுசரிலிருந்து சில்லறை திருடுவதெல்லாம் அவளுக்குத் தெரியாது. வர்றவன் இவள் கொலுசை, கம்மலை கழட்டிச் செல்லாமலிருந்தால் சரி.

ஒரே விசயம் அவங்காத்தாள் கண்ணுக்குச் சிக்காமல் இழுத்துப் போய் விட வேண்டும்வரமறுப்பவளுமில்லை வம்பில் கையைப் பிடித்து  
இழுப்பாளுமில்லைஅது ஒரு தனிரகம்.  பாவமென்று சொன்னாலும் பத்தாதுமீறி மயங்காத்தாள் கண்ணில்  
அகப்பட்டால் போச்சுகுடியானவனென்றால் வாய்வரைக்கும் வந்தாலும் அடக்கிக்கொண்டு,  மனசுக்குள் வார்த்தை பேசியவாறே ஊமச்சியை அடித்து இழுத்துச் சென்றுவிடுவாள்பலவட்ட சாதியென்றால் முடிந்தது  சோளி.. 
ஊட்டு  வாசலேறி ஆத்தாள்   அப்பனையெல்லாம் இழுத்துக்   காசைப்பிடுங்காமல் விடமாட்டாள் மயங்காத்தா.

மயங்காத்தாள் கண்பார்வையிலிருந்து இவள் அங்குமிங்கும் நகர்வதே கடுசு.கிழவி நகரும் நேரம் வாய்த்தாலும் அந்தக்குடிசைக்குள் புகுந்து சோளி 
பார்க்கவும்,பயல்களுக்கு சாதி கவுரவம் இடங்கொடுக்காது. ஆக அவள்
குப்பை  கொட்டவோ காடு கரைக்கு பேளப்போகையிலோ ஏரியோரம்  
இழுத்துச்  சென்றால் தானுண்டு.

அப்படியும் புதரோரம் வைத்துப் புணர்க்கையில் கிழவி பின்னாலேயே   மோப்பம்   பிடித்து வந்து அவளை அடித்து இழுத்துப்போவதுண்டு.
.
கழுத முண்டஒட்டனூட்டு நாயி ஓலுக்குக் காத்தாப்பிடி அரிப்பெடுத்தே   அலையுறாகூப்புட்டான்னா பொறவுக்கே போயிருவியா?’
காசுதராட்டியும் போச்சாதுன்னு உட்டாசில்றத்தாயோளிக கொலுசு மொதக்கொண்டு உருவ மட்டும் விரிச்சுட்டு மல்லாந்துருக்கா பாரேன்

எட்டுக்குத்துக்கு எளையவனெல்லாம் ஏமாத்தி இழுத்துட்டுப்போறான் தட்டுவாணி  முண்டைக்கு எப்ப புத்தி மசுரு வந்து புளுதண்ணி குடிக்கப்போறானு தெரியல

வார்த்தை வாங்காத நாளென்று எதுவுமில்லைஇருந்தும் இவை எதுவும் என்றேனும் அவள் செவிப்பறையில் ஏறியதுண்டா என்றால் கிடையாதுபிரமை பிடித்தாற் போலொரு இருப்புஇன்னும்  மீறிப்போனால் நாலைந்து  வருசமிருக்குமா உடம்புக்கட்டு.,  அதுக்குள்ளாரயுமே  எந்தக்குடிகார  நாயிகிட்டயாச்சும் சீப்பாரத்து சீலபரி வாங்கி நாசமாப்போய் விடுவாளோ என்பதுதான்  கிழவி   கவலையெல்லாம்.
சொல்லப்போனால்,இவள் இப்படியே பிறவியல்லவயசுக்கு வந்திருந்த 
காலத்தில்  வம்படியாய்த் தூக்கிப்போய் ஏரியோரம் வைத்துப் புணர முயன்ற பொரிக்காரன் ஒருவனின் உறுப்பை வெங்கச்செங்கல்லால் நசுக்கித்  துரத்தினாள் என்றொரு பேச்சு உண்டு ஊருக்குள்.  அதிலிருந்துதான் புத்தி பிசகென்று கதை கிளம்பியது.
ஆத்திரத்தில் செய்வதற்கு அர்த்தம் சொல்லாது போனால் புத்தி   பிசகென்றுதானே பொருள்அதைத்தான் அவளும் நினைத்தாளோ என்னவோஅப்படியே இருந்துவிட்டாள்அர்த்தம் சொல்லாததால் அர்த்தமில்லாமலில்லை என்பதொருபுறம்.

ஊர் மேயும் ஆட்களுக்கு இந்த ஊமைக்கோட்டான் வசதிதான்  என்றாலும்  கொஞ்ச நாள் பயந்து   போய் ஒரு பயலும் கிட்டே நெருங்காதிருந்தான்அதுவும் கல்லால் நசுக்கிய கதை கேள்விப்பட்டவெனெல்லாம் உனக்கொன்று உன் சாமானத்திற் கொன்று என பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு ஓடினான்.

அதுபோக,அந்தச்சந்தைக்கு அவள் வந்து சேர்ந்த கதை ஒன்று இருக்கிறதுஏழெட்டு பிராயம் தானிருக்கும்வெய்யில் சாயும் நேரமாய் வந்து சந்தை நடுவே கூட்டத்தில்  கையுதறிச்   சென்றிருக்கிறான் அப்பங்காரன்பொழுது போனதும் கடையெல்லாம்   
சுருட்டிக்கொண்டு  ஆளாளுக்கு நடையைக் கட்டிக்கொண்டிருக்க, போறவன் எவனும் புழங்க வருவானா என்று காத்திருந்த மயங்காத்தா  கண்ணில்  
இந்தப் பொடிமனுசி விழுந்தாள்கண்ணீர் வழிந்து,  மூக்குச்சளியொடு கலந்து கொண்டிருக்க நின்றவளின் அருகில் போனாள் மயங்காத்தா.

யாரு புள்ளடி நீயி...இதேன் நின்னுட்டு அழுவற… ஆரு கூட வந்த

கேட்கப்பட்ட தொனியிலேயே மிரண்டாள் சிறுமி
இன்னொரு மூச்சு அதற்கே அழுவாள் போல் தெரிந்ததும், மூக்கைச்சிந்திவிட்டு முந்தானையில் முகந்துடைத்துவிட்டு 
சந்தை முழுவதும்   அவளைத்தூக்கிக் கொண்டு ஒரு நடை போனாள் மயங்காத்தா
கேட்பாராரும் இல்லை. பிறகு மீண்டும் தன் சாலைக்கு உள்ளே கூட்டிப்போய் அமர்த்தித் தண்ணீர் கொடுத்தாள்.  அடுத்தடுத்து கேட்டகேள்வியெதற்கும்  பதிலில்லை. மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்தவள் திடீரெனக் . கட்டைக்குரலில் கரைந்தாள்ஊமச்சியென்பது தெளிவானதுஆக தொலைப்பதற்காகவே   சந்தைக்கு   கொண்டு வரப்பட்ட பண்டமிது.

பொட்டப்புள்ள, பாக்கவும் நொட்டையில்ல., தொப்ப தள்ளி மாரும் வயிறும் தொங்கத்தொடங்கியிருந்த மயங்காத்தாளுக்கு ஊமச்சியை கூடவே வைத்துக்கொள்ள பிரியம் தான். பின்னும் சில வாரங்களுக்கு பொத்திப்பொத்தி வைத்தாள் குடிசைக்குள்ளேயே… தேடி யாரும் வரவில்லை என்று உறுதியாகும் வரை நெஞ்சு படபடத்துத்தானிருந்தாள் அவள்.

அதற்கடுத்த வருசங்களில் கண்ணைத்தின்னவனெவனும் சாராய 
மயக்கத்தில் வந்தால் தான்   உண்டு, என்றானது கிழவி பிழைப்புபழையபடிக்கு போக்கும் வரவுமில்லைவருமானம்   போதாமல் முறுக்கு சுட்டு விற்கத்தொடங்கினாள்ஊமச்சியை வைத்து 
சீவக்கட்டை  முடையச் செய்தாள்பேருக்கு எதோ சீவனம் 
ஓடிக்கொண்டிருந்தது.  

வருடம் போகப் போகபருவம் வந்த ஊமச்சியை பக்குவம் சொல்லிப் பண்டமாக்கினாள் கிழவி.  வெசாழக்கிழமையென்றால் அந்த ஜில்லா முழுவதுமிருந்து 
சந்தைக்காரர் கூட்டம் குழுமிவிடும்.வாரத்தில் ஒரு நாள் பொருள் வித்த களைப்பிலும் காசுமூட்டை நிறைந்த திருப்தியிலும் வரும் கடைக்காரர்களில் ஒருவருக்கேனும் மயங்காத்தா மகளுக்கு காசிறைப்பதற்கு  கசக்காது தான். மீதமிருக்கும் ஆறு நாளும் உள்ளூரில் ஓசிச்சோறாகாமல் பொத்தி வைக்கவேண்டியிருக்கும் ஊமச்சியை.

அரிசிக்காரக் கிழவனுக்கு எழுபதைத் தொடுகிறது வயது. மயங்காத்தாள் மடியில் வந்து கிடப்பது பல வருடப் பழக்கம். இப்போது நாடி செத்துவிட்டது; நாக்கைக் கூட நீட்ட முடியாதுதான் என்றாலும் அம்மணத்தைப் பார்ப்பதில் அவனுக்கு ஆசை கொஞ்சம் தணிந்துவிடுகிறது போல.

சந்தை நாளென்றால் விடியாலையே வந்துவிடுவான் லாரியோடு. மயங்காத்தாள் குடிசையை ஒட்டி நிறுத்திவிட வேண்டியது. தார்ப்பாய்களை எடுத்துக் கடை போடச் சொல்லி ஆட்களை அனுப்பிவிட்டால் ஆயிற்று. மகன் வந்து போனி தொடங்க எப்படியும் மணி எட்டு ஒன்பது ஆகிவிடும் அதுவரை மூடாக்குப் போட்ட லாரிக்குள் கிழட்டு மோளம் தான்.

லாரிக்கு நேரெதிர்  நிற்கும் புளிய மரக் கொம்பில் இந்தக்கூத்தைப் பார்ப்பதற்கென்றே சில்வண்டுகளின் கூட்டம் வேறு. சந்தையென்ன ஊரா, சேரியா? வாரமொருதரம் வந்து போகும் காடுதானே. அதனால் கிழவியையும் கேப்பார் மேப்பார் யாருமில்லை. கிழவனுக்கோ அவள் சாலைக்குள் கால் வைப்பது தான் அசிங்கமாய்த் தோன்றுமே அல்லாமல் குஞ்சு குளுவான்கள் பார்த்துச் சிரிப்பதில் எதுவும் பிரச்சனை இருந்ததில்லை.

மகன் வந்ததும் கடையில் சோளி... ஒன்றும் பெரிதாகப் புடுங்கப்போவதில்லை கிழவன். காசை எண்ணி எண்ணி வைப்பது மட்டும் தான். உச்சி ஏறிவிட்டதா… மீண்டும் சோத்துப்போசியோடு லாரிக்குச் சென்று கிடப்பு.  மயங்காத்தாளுக்கோ தனக்கென வரும் ஒரே கிராக்கியை விட்டு விடவும் மனசொப்பாது. ஊமைக்கோட்டானை தனியே விட்டாலும் பொழப்பு கிழிந்துவிடும் என்ற பயம்.  அதனால் அரிசிக்கடையில் போய் உக்காரச் சொல்லிவிடுவாள்.

அப்படி அரிசிக்கடையில் கிழவன் மகனைப் பார்த்துதான் ஆம்பிளை ஆசை முதல்முறை கிளம்பியது இவளுக்கு. விரைத்த சாமான் சிக்கிக்கொண்டால் பல்லை வெறுகி நிற்கும் நாயின் முகமாகத்தான் மீசை வைத்த எந்த முகமும்  அவளுக்குத் தோன்றியிருக்கின்றது. தன்னை அடிப்பதற்கும், உதைப்பதற்கும், புணர்ந்து புணர்ந்தே கொல்வதற்கும் உரிமை கொண்ட எசமானர்கள் என்பது தாண்டி அவள் ஆசைப்பட்ட ஒரே ஆண் அவன் தான்.

எத்தனையோ நாட்களாய் பொருமியிருக்கிறாள் மனதுக்குள். அவன் வந்து கையைப்பிடித்து இழுத்துப்போக மாட்டானா என்று. ஊமச்சியை மட்டும் சொல்லக்கூடாது. ஆசையை கிளப்பிவிட்டவனும் அவன் தான். முனுக்கு முனுக்குனு இருந்தாலும் முன்னூறு குசும்பு செய்வான். சொந்தக்காரக் கைத்தடி ஒருவன் கூடவே இருப்பான். அப்பவும் மூத்திரம் போக எழுந்தால் கூட  இவளைத்தான் உக்காரவைப்பான் கடை நடுவில். போகிற போக்கில் உரசுவதும், மூட்டை தூக்கித் தரச் சொல்லி முலைகளோடு முதுகையும் தோளையும் ஒட்டுவதுமாய்க் கிளப்பி விட்டிருந்தான்.  அவளுக்கென்னவென்றால், வான்னா வரப்போற தன்னையும் பாங்காப் பார்க்கிறானே மனுசன் என்று உச்சி குளுந்துபோகும்.  அரிசிக்கடையோரம் நிலைக்கல்லில் உட்கார்ந்து நேரம் போவதறியாது அவனைப் பார்த்துக்கொண்டிருப்பாள். சப்பணங்கால் போட்டு உட்கார்ந்து அவன் படியளந்து போடுகையில் கண்கள் சொக்கும் அவளுக்கு. சிவந்த உடம்பும், உடம்பெல்லாம் மயிருமாய் அவனுடம்பு ஊமச்சியைக் கட்டிப்போட்டிருக்கும்.புருவமிரண்டும் இடைவெளியில்லாமல் சேர்ந்திருக்கும் இடத்தில் முத்தமிடுவதாய்க் கற்பனை செய்துகொள்வாள். நெஞ்சின் மயிரை அளைவதாக இவள் விரல்கள் காற்றில் நெளிந்து கொண்டிருக்கும்.   காசை வாங்கி தொடைக்குக் கீழே சாக்கிற்குள் வீசும் ஒரு நொடி; விலகும் அவன் வேட்டியின் இருட்டினுள் தனக்கான சொர்க்கம் இருப்பதாய் உணர்ந்தாள்.அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே புழைக்கந்தின் முனையில் ரத்தம் பாயும் அவளுக்கு. 

அரிப்பைச் சொல்லக் கூசாத ஆட்களை பார்த்தவளுக்கு ஆசையைச் சொல்லத்தயங்குபவன் மேல் பிரியம் பொங்கியது. அவளுக்குச் சொல்ல முடியாதென்று விசனம்; அவனுக்கோ தான் சொன்னாலும் ஊமச்சிக்குப் புரியாதோ என்று விசனம். வயசென்று பார்த்தால் அவளை விட மூத்தவனாய் நிச்சயம் இருக்கமாட்டான் அவன். ஊர்ப்பேச்சுக்கு பயந்த சுபாவம். அப்பனைப்போல் இல்லை. கூழுக்கும் மீசைக்கும் ஆசை அவனுக்கு. ஆட்கள் கண்ணுக்கும் சிக்காமல் அப்பனுக்கும் தெரியாமல் அவளைப் புழங்கவேண்டும். கிழவியிடம் சொல்லிவிடுவாளோ என்றும் பயம். முன்னமே கிழவியையும் இவளையும் பற்றிக் கொஞ்சமாகக் கேள்விப்பட்டிருந்தான். அப்படியும் கூட, ஆவது ஆகட்டுமென முந்தின வாரம் ஒரு மாதிரியாகச் சொல்லியே விட்டான். அடுத்த சந்தையன்னைக்கு சாப்பிட வாரேன் என்று... 

ஊமச்சிக்கோ தலைகால் புரியவில்லை. மகள் போல வளர்த்தாள் என்றாலும் கிழவி தன் வீட்டு அடுப்படியை நெருங்கவிட்டதில்லை ஊமச்சியை. தனக்கும் புழங்காத சாதியோ கூட்டமோவென்று ஒரு சந்தேகம் தான். பருவம் வந்து அவளாய்ப் பழகிய வரையிலும் தனியே தட்டும், சொம்பும், உண்டு கழுவ ஒரு மூலையும் என்று ஒதுக்கித்தான் பார்த்தாள் கிழவி.

வளர்ந்த பிற்பாடு தான் தனியடுப்பு வைத்துக் கொண்டாள் ஊமச்சி., அவள் கை ருசி அவளுக்கே மிதப்பைத் தந்தது. கிழவியிடம் உண்ட சோறு மண்ணுக்கும் பொறாதது. கிழவியின் குழம்பும் ரசமும் கழுதை மூத்திரம் இதுதானோ என்றிருக்கும். பிறகு தான், கூழோ களியோ தனக்கென சமைத்துக்கொண்டாள். அதன் ருசி அவள் தவிர யாரும் அறிந்ததில்லை. நாய்க்கு வைப்பாள்; முழுசாய் நக்கிவிட்டு திரும்பிப் படுத்துக்கொள்ளும் அவளைப்போலவே. சோறு மீந்தால், கொட்டிவைத்து காக்கை தின்பதை வெறித்துப் பார்த்திருப்பாள். 

பொசுக்கென்று சோறுண்ண வாரேன் என்றல்லவா சொல்லிவிட்டான் பாவி. வேறென்ன வேண்டும் இனிமேல். அவன் உண்ணட்டும் அப்படியே அவன் கால் ரெண்டையும் பிடித்துக்கொண்டு அழவேண்டுமென்று நினைத்துக் கொண்டாள். அவன் தொண்டையில் முதல் கவளம் இறங்கும் போதே செத்துவிட்டாலும் பாவமில்லை என்று தோன்றியது. ஊமச்சிக்கு. 

அந்த வாரம் முழுக்க வந்தவனிடமெல்லாம் அவன் நினைப்போடே படுத்தெழுந்தாள். காய்ந்த மட்டை போலக் கிடக்கும் ஊமைச்சியா இதுவென்று வியந்து தான் போனான் ஒவ்வொருவனும். ஒரு நாளுமில்லாமல் காசு வேண்டுமென்று கேட்டாள் வந்தவனிடமெல்லாம். மறுப்புசொல்லாமல் கொடுத்தவன் நிறைய. காசுக்குத் தனியென்று மாரைக் கடித்தான் ஒருவன். ரத்தம் பீறிட்டது. காயம் வலிக்கவில்லை அவளுக்கு. ரத்தத்தின் சம்பளம் வலியை மறக்கடித்தது.

இன்னொருவன் சாராயம் குடித்தால் தானுண்டென்று காசைக்கண்ணில் காட்டியே குடிக்க வைத்தான். மயங்கியவளை என்ன செய்தானென்று தெரியவில்லை. உறுப்பெல்லாம் ரணமாக்கியிருந்தான். முட்புதருக்குள் அம்மணமாய்க் கிடக்கவிட்டு அப்படியே ஓடியிருந்தான்.

அத்தனையும் பொறுத்திருந்தாள் ஊமச்சி. சந்தைநாளும் வந்தது. உச்சிப்பொழுதுக்கு முன்னமே கிழவி போய்விட்டாள். வெளியடுப்பில் சமைக்க முடியாது., பார்த்தாலும் பார்த்துவிடுவாள் கிழவி. அத்தனை வருசத்தில் முதல் தடவையாக கிழவியின் அடுப்படியில் உட்கார்ந்தாள். பயம் பிடுங்கித்தின்றது. அரிசியும் பருப்புஞ்சோறு. ஆட்டுக்கறியும் சமைத்தானது. புதுசாய் வாங்கிய தூக்குப்போசியில் சோறும் கறியும் நிரப்பி வைத்தாள்.  பின் எல்லாம் கழுவிக் கவிழ்த்தினாள். அத்தனை வருட வலியும், காயமும் அந்தச் சோற்றுப்போசியில் நிறைந்திருந்தது போல் நினைப்பு. அதையவன் உண்டாலும் போதும் பொறந்த பொறப்பிற்கு அர்த்தம் என்று கொண்டாள். கிழவி திரும்பும் நேரம் ஆனதும் போசியை முந்தானையில் மறைத்துக்கொண்டு சாலையிலிருந்து வெளியே வந்தாள்.

அரிசிக்கடையில் ஆளைக் காணவில்லை. இவளுக்கு முன்பாக ஒத்தயடிப்பாதையில் காத்திருந்தான் அவன். சுற்றும் முற்றும் பார்த்தவள் வெடுக் வெடுக்கென ஓட்டமும் நடையுமாய் அவன் கையைப் பிடித்துக்கொண்டு ஏரிப்பள்ளத்தின் நடுவே கூட்டிப்போனாள். உச்சியில் இருந்தது வெய்யில்.மொட்டைப்பாறையின் ஓரமாகப் போசியை வைத்துவிட்டு உட்கார்ந்தாள். வேர்த்துப்பூத்திருந்தது உடம்பெல்லாம். அவனுக்கோ மேல் மூச்சு கீழ்மூச்சு. போசியைத் திறக்கப்போனவளை மறித்தவன் மாரைப்பிடித்து மேலே சாய்ந்துகொண்டான். நினைவே தப்பிவிட்டது அவளுக்கு. ஊமச்சியின் முனகலில் ஒரு கணம் பயந்துதான் போனான் அவன்.  காயம்பட்ட மாரைக் கசக்கிய கையைப் பற்றினாள். இன்னும் இன்னும் அழுந்தத் தேய்த்தாள்., வலியில்லை அதை வரம் என்று கொண்டாள்.

கால்கள் விரித்து அவன் கால்களொடு பின்னி, அவனைப் பின்னிருந்து அழுத்தினாள். ஏறி முயங்கத் தொடங்கியவனுக்கு பாறையில் தேய்ந்து முழங்கால் நோவது அறிந்தவள் சட்டெனத் தான் மேலேறினாள்; ஜென்ம வெறி. நனைந்து கசகசத்தது தேகம் இரண்டும். ரத்தம் கசிந்த முட்டிகளில் பாறைமணல் துகள் ஏறி நற நறவென்றரைந்தது. இன்னும் இன்னும்.. போதுமில்லை இருவருக்கும். பீய்ச்சிய நீரனைத்தும் சூல்பையில்  நிறையட்டுமென்று இறுக்கியணைந்தாள் அவன் மேல். அடித்த வெயிலில் கண்கள் திறக்கவழியில்லை. அவன் மாரின் மயிரெலாம் அளைந்தாள். கலவிக்கழிவை நாவால் துடைத்தாள்.  இடுப்பைப் பற்றிய கைகளை மெதுவாய் உதறி எழுந்தான் அவன். அப்படியே மல்லாந்து கிடந்தாள் ஊமச்சி. உடல் அவளிடமில்லை என்றானது. ஆசையென்றால் இன்னதென்றில்லை. அத்தனையும் தீர்ந்த திருப்தி.

புதர் மறைப்புக்குச் சென்றவன் உடுத்தித் திரும்பினான். உள்ளபடியே மயங்கிக் கிடந்தாள் அவள். எழுப்ப நினைத்தவன் சட்டெனத்திரும்பி நடக்கலானான். அவளுக்கோ எழ மனமில்லை. இன்னமும் மேலே படர்ந்திருக்கிறான் அவன் என்பதாய்ப் பிரமை. உள்ளே சேர்ந்த வெம்மை உடனே கைகால் முளைத்துப் புரள்கிறது அவளுள். சட்டென விழித்தாள்... சோறு?! விரசாய் எழுந்து ஒண்ணுக்கு ரெண்டாய்ச் சீலையச் சுற்றிக்கொண்டு போசியுங்கையுமாய்த் துரத்தினாள். அவன் தூரம் சென்றுவிட்டான். கூப்பிடு தூரம் தான். ஊமச்சி என்ன செய்வாள்? எந்த வலியிலும் குரலெடுக்க முயலாதவள் இரைந்து கூப்பிட்டாள். எவரையும் திடுக்கிட வைக்கும் சத்தமது.

திரும்பினான்., போசியைக்காட்டினாள். நின்றவனை நோக்கி ஓட்டமாய்ப் போயடைந்தாள். 

’சுத்தி வா இல்லாட்டி இங்கயே இருந்துட்டு பொழுதோட வா.. பொறவாலயே வராத....’ படபடவென்று பொரிந்து தள்ளினான்.

சரியென்று தலையாட்டிவிட்டு போசியை நீட்டினாள். வாங்கிக்கொண்டு விருவிருவென்று நடக்கத்தொடங்கிவிட்டான். அப்படியே அமர்ந்தவள் தான். நேரம் காலம் நகர்வது தெரியவில்லை. பொழுது சாயத்தான் திரும்பி வந்தாள். ஒத்தயடிப்பாதையினோரம் வெள்ளவேலாமரத்தடியில்  போசி வீசிக்கிடந்தது. கறுப்பெரும்புக் கூட்டம் படையெடுத்திருந்தது சோறெல்லாம்.

மூச்சடைத்தது அவளுக்கு. அழக்கூட முடியவில்லை. எறும்பெல்லாம் தலை திருப்பிப் பார்ப்பது போலிருந்தது. தன்னைப் புணர்ந்த ஒவ்வொரு முகமும் பல்லிளித்து அள்ளித்தின்றது சோற்றை. அடித்தொண்டையிலிருந்து கதறினாள். ஊமைச்சியின் பேச்சு அது. மனிதமிருகம் மறந்திட்ட உறுமல் அது. ஆயுசுக்கும் பொத்திவைத்த அழுகையெல்லாம் உடைந்து பெருகியது. மண்டி போட்டு விழுந்தாள். மண்ணையள்ளி அள்ளி வீசினாள் சோற்றின் மேல். எறும்புக்கூட்டம் சிதறிச்சென்றது.

மடலிட : rajan@rajanleaks.com