ஒரு
துரோகியுடனான
தற்செயல்
சந்திப்பை
எப்படி
கடந்து செல்வது..?
விரிவுபடுத்தப்பட்ட
பிரபஞ்சத்து
விழி மூலம்
துரோகியின்
பார்வையினை
தரையில்
தாழ்த்தலாம்..
குறிப்பால்
உணர்த்தும்
ஒன்றிரண்டு
சொற்களால்
ஓடியொளியும்
துரோகியின்
பாதுகாப்பு
எல்லைகளை சுருக்கலாம்..
நிமிர்த்தப்பட்ட மார்பின்
நிலைத்த
இயல்பு நிறுத்தி
துரோகியின்
புறவெளியெங்கும்
வெப்பச்சலனம்
கொண்டு நிரப்பலாம்..
ஆவேசத்துகள்களை
உதடுகளில்
ஒட்டவைத்து
இறுக்கமாய்
சிரித்து
துரோகியின்
தேகத்தில்
வியர்வையூற்று பெருக்கலாம்..
இவையெதுவும்
வேண்டாமெனில்
கைகுலுக்கி,
தோள்கள்
பற்றி,
கர்வப்
புன்னகை
கழற்றி
வீசியெறிந்து,
”நண்ப” என்றழைத்து
மார்பிலணைத்தும் கொல்லலாம்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக